(ஆர்.யசி)

பொதுபல சேனா பௌத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதேபோல் அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவரின் மூலமாக ஞானசார தேரரை  கொலைசெய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். 

ஞானசார தேரரை கைது செய்தாலோ அவர் மீது சிறிய தாக்குதலேனும் நடத்தினால் நாட்டில் சிங்கள பௌத்த புரட்சி வெடிக்கும் எனவும் அவர் எச்சரித்தார். 

அண்மைக்காலமாக பௌத்த சிங்கள அமைப்புகள் நாட்டில் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் சிங்கள ராவய அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.