பட்டம் விடச் சென்ற கல்லூரி மாணவன் பாம்புக் கடிக்கு உள்ளாகி பரிதாபகரமாக மரணம் அடைந்த சம்பவம் துன்னாலைப் பகுதியில் நேற்று இடம் பெற்றுள்ளது.

பருத்தி துறை ஹாட்லிக் கல்லூரி உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் துன்னாலை வடக்கைச் சேர்ந்த சிவலோகநாதன் தேசிகன் (18) என்பவரே இவ்வாறு பாம்புக் கடிக்கு உள்ளாகி சிகிச்சை பயனளிக்காத நிலையில் மரணம் அடைந்தவராகும்.

நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரனையைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.