"தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தாளத்­துக்கு ஆடும் அர­சாங்கம்''

16 Nov, 2015 | 02:06 PM
image

நாட்டின் நீதித்­து­றை­யையும் சட்­டத்­தையும் மீறி செயற்­ப­டு­மாறு வலி­யு­றுத்தி தமிழ்த் தேசியக் கூட்ட­மைப்பு வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் போராட்டம் நடத்­து­கின்­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தாளத்­துக்கு அர­சாங்கம் ஆடி வரு­கின்­றது என்று மஹிந்த அணியின் முக்­கி­யஸ்­தரும் மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.

அர­சாங்­கத்­துக்குள் பாரிய முரண்­பா­டுகள் ஏற்­பட்­டு­விட்­டன. இவ்­வா­றான நெருக்­க­டி­யா­னது சர்­வ­தேச மட்­டத்­திலும் இலங்­கைக்கு பாதிப்­பாக அமையும் . ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் அமைச்­ச­ர­வைக்­குள்­ளேயே பாரிய முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன என்றும் அவர் குறிப்­பிட்டார்.

நாட்டின் அர­சியல் நிலைமை குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான தேசிய அர­சாங்­கத்தில் பாரிய முரண்­பா­டு­களும் நெருக்­க­டி­களும் ஏற்­பட்­டுள்­ளன. பரஸ்­பரம் முரண்­பா­டான கருத்­துக்கள் அமைச்­சர்­க­ளினால் விடுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. அமைச்­ச­ர­வைக்­கான கூட்டு பொறுப்பு இல்­லாமல் போய்­விட்­டது.

ஒரு­வ­ருக்­கொ­ருவர் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்துக் கொள்­கின்­றனர். அவ்­வாறு பார்க்­கும்­போது நல்­லாட்சி அர­சாங்­கத்தில் பாரிய நெருக்­க­டிகள் ஏற்­பட்­டுள்­ள­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அமைச்சர் ஒருவர் இரா­ஜி­னாமா செய்­துள்ளார். மற்­று­மொரு அமைச்­சரை இரா­ஜி­னாமா செய்­யு­மாறு கோரு­கின்­றனர்.

அர­சாங்­கத்­துக்குள் என்ன நடக்­கின்­றது என்று ஒரு­வ­ருக்கும் புரி­ய­வில்லை. ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் பாரிய முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன. இரண்டு கட்­சி­களும் தற்­போது பிரிந்தே உள்­ளன. எனினும் பத­வி­க­ளுக்­கான இணைந்து வாழ்க்கை நடத்­த­வேண்­டிய நிலையில் உள்­ளனர்.

இந்­நி­லையில் அர­சாங்­கத்­துக்குள் ஏற்­பட்­டுள்ள இந்த நெருக்­க­டி­யா­னது சர்­வ­தேச மட்­டத்­திலும் நாட்­டுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமையும்.இது இவ்­வாறு இருக்க தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு நாட்டின் சட்டம் மற்றும் நீதித்­து­றையை மூடி­விட்டு அவற்­றுக்கு அப்பால் சென்று தமது கோரிக்­கை­களை நிறை­வேற்­று­மாறு கோரு­கின்­றது. நாட்டின் நீதித்­து­றை­யையும் சட்­டத்­தையும் மீறி செயற்­ப­டு­மாறு வலி­யு­றுத்தி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் போராட்டம் நடத்­து­கின்­றது.

வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் கூட்­ட­மைப்பு ஹர்த்தால் நடத்­து­கின்­றது. இதன்­மூலம் நாட்டின் நீதி­மன்றத் துறையை மீறி செயற்­ப­டு­மாறு அர­சாங்­கத்தை கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­து­கின்­றது.

மறு­புறம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தாளத்­துக்கு அர­சாங்கம் ஆடி வரு­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­யதில் கூட்­ட­மைப்­புக்கு பாரிய பங்கு உள்­ளது. எனவே கூட்­ட­மைப்பின் தாளத்­துக்கு அர­சாங்கம் ஆடி வரு­கின்­றது.

நாடு அர­சியல் பொரு­ளா­தார மற்றும் சட்டம் ஒழுங்கு துறையில் பாரிய நெருக்­க­டி­களை சந்­தித்­து­வ­ரு­கின்­றது. இவற்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றோம். மக்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்திவருகின்றோம்.

பொருளாதார ரீதியிலும் தற்போது நாடு வீழ்ச்சிப் பாதையை நோககி பளணிக்கின்றது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிகண்டுவருகின்றது. பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19