தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புற தோட்டத்தில் 15 நாள் வயதுடைய குழந்தையொன்று இன்று மாலை 4 மணியளவில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த குழந்தை தாய்ப்பால் அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மூச்சுத் தினறல் காரணமாக இறந்ததாக முதற்கட்ட விசாரணையில்  இருந்து தெரிய வந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனைகள் நாளைய தினம் இடம் பெறவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.