மஸ்கெலியா  லக்கம் பிரதேசத்தில் இறைச்சிக்காக மரையை வேட்டையாடிய மூவரை நல்லத்தண்ணி அதிரப்படையினர் கைது செய்துள்ளனர்.

சிவனொளிபாதமலை வனப்பகுதியில் வேட்டையாடி மரையை வெட்டி இறைச்சியாக்கிக்கொண்டிருந்த சந்தர்பத்திலே மேற்படி மூவரையும் நேற்று கைது செய்துள்ளனர். 

15 கிலோ கிராம் மரை இறைச்சியை கைப்பற்றியதுடன், மிருக வைத்திய அறிக்கையின் பின் மூவரையும் மஸ்கெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேக நபர் மூவரையும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.