வருடத்தின் தமிழ் பத்திரிகைக்கான அதி சிறந்த விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் விருது வீரகேசரி நாளிதழின் செல்வதுரை ஜீதெந்திரா பிரசாத்திற்கு கிடைத்தது.

வருடத்தின் அதிசிறந்த விளையாட்டுத்துறை பக்கத்திற்கான விருது நெவில் அன்தனியினால் தொகுக்கப்படும் வீரகேசரி ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷலுக்கு வழங்கப்பட்டது. 

பத்திரிகைக்கான அதி சிறந்த சிங்கள ஊடகவியலாளர் விருது அத பத்திரிகையின் ரொஷான் பெத்தும் ஸ்ரீ விஜேரத்னவுக்கும் பத்திரிகைக்கான அதி சிறந்த  ஆங்கில ஊடகவியலாளர் விருது சிலோன் டுடே பத்திரிகையின் அஞ்சன களுஆராச்சிக்கும் வழங்கப்பட்டன.

சிங்கள மொழிக்கான அதிசிறந்த விளையாட்டுத்துறை பக்கத்திற்கான விருது ஞாயிறு திவயின பத்திரிகைக்கும் ஆங்கில மொழிக்கான அதிசிறந்த விளையாட்டுத்துறை பக்கத்திற்கான விருது சிலோன் டுடே பத்திரிகைக்கும் கிடைத்தன.

விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறைத் திணைக்களமும் இணைந்து இரண்டவாது வருடமாக ஏற்பாடு செய்த ஜனாதிபதி விளையாட்டுத்துறை விருது விழா 2016 பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  மே 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

2016க்கான தலைசிறந்த வீராங்கனைக்கான விருதை நிமாலி லியனஆராச்சிக்கும் தலைசிறந்த வீரருக்கான விருது மெத்யூ அபேசிங்கவுக்கும் வழங்கப்பட்டன. 

ஆண்களுக்கான தலைசிறந்த அணிக்கான விருதும் பெண்களுக்கான தலைசிறந்த அணிக்கான இலங்கை கெரம் அணிகளுக்கு கிடைத்தன.

மாற்றுத்திறனாளிகளில் தலைசிறந்த வீராங்கனைக்கான விருது அமரா இந்துமதி கருணாதிலகவுக்கும் தலைசிறந்த வீரருக்கான விருது தினேஷ் ப்ரியன்த ஹேரத்துக்கும் கிடைத்தன.

மாற்றுத்திறனாளிகள் தலைசிறந்த அணிக்கான விருது இலங்கை பார்வைகுன்றியோருக்கான கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்டது.

கனிஷ்ட பிரிவில் தலைசிறந்த வீராங்கனைக்கான விருது யாழ்ப்பாணம், பளுதூக்கும் வீராங்கனையான சுண்டிக்குளி மாணவி அர்ஷிகா விஜயபாஸ்கருக்கும் தலைசிறந்த வீரருக்கான விருது சன்துஷ் வீரசிங்கவுக்கும் கிடைத்தன.

இளையோருக்கான பிரிவில் தலைசிறந்த வீராங்கனையாக நீச்சல் வீராங்கனை கிமிக்கோ ரஹிமுக்கும் தலைசிறந்த வீரருக்கான விருது எல். பி. ஜீ. தனஞ்செயவுக்கும் வழங்கப்பட்டன.

இளையோருக்கான அதி சிறந்த தேசிய அணிக்கான விருது கெவின் டிக்சன் ஜோசப்பின் தலைமையிலான 20 வயதுக்குட்பட்ட அணிக்கு எழுவர் றக்பி அணிக்கு கிடைத்தது. இவ்வணி 2016இல் ஆசிய கனிஷ்ட சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவற்றைவிட இன்னும் பல விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த விளையாட்டுத்துறை இலத்திரனியல் துறை ஊடகவியலாளராக சூரியன் வானொலியின் வாமலோசனுக்கு கிடைத்தது.

வாழ்நாள் விருதுகள்

விளைாயாட்டுத்துறை கீர்த்தி வாழ்நாள் விருது: டி. எச். சந்த்ரசிறி.

விளையாட்டுத்துறை பூஷனம்: டாக்டர் மேஜர் ஜெனரல் செல்லையா துரைராஜா, சுமந்திரன் நவரட்ணம், டேவின் பெரேரா, யோகானந்த விஜேசுந்தர, கே. எல். எவ். விஜேதாச, கே. ஜீ. ரஞ்சித் வீரசேன.

விளையாட்டுத்துறை ரத்னா: விமலசேன பெரேரா.