பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு எதிர் வரும் 28 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை அமெ­ரிக்­கா­ செல்­கின்றார். இதன் போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ரம்ப் உள்­ளிட்ட அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களை சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்ளார்.

அமெ­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஓபா­மாவின் ஆட்சி நிறை­வ­டைந்து தற்­போது குடி­ய­ரசு கட்­சியின் ஜனா­தி­ப­தி­யான டொனல் ட்ரம்பின் ஆட்­சியில் இலங்­கையின் பிரதமர் ஒருவர் அமெ­ரிக்­கா­விற்கு விஜயம் செய்­வது இதுவே முதற் தடவையாகும். எனவே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் அமெ­ரிக்க விஜயம் இரு நாடு­க­ளுக்கும் முக்­கி­ய­மா­ன­தாக கரு­தப்­ப­டு­கின்­றது. 

தொடர்ந்தும் மூன்று நாட்கள் அமெ­ரிக்­காவில் தங்­கி­யி­ருக்கும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பல தரப்பு சந்­திப்­பு­க­ளிலும் கலந்து கொள்ள உள்ளார். எவ்­வா­றா­யினும் அமெ­ரிக்­காவின் புதிய ஆட்­சியில் இரு தரப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வது தொடர்பாக இலங்கை கடந்த நாட்­களின் அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வந்­தது. 

இரு நாடு­க­ளி­லுமே ஆட்சி மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்ள நிலையில் இரு தரப்பு வெளிவி­வ­கார கொள்­கை­களில் புரிதலுடன் செயற்பட வேண்டியதுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் பிரதமர் அமெரிக்கா செல்கின்றமை முக்கியமானதாகும்.