வெள்­ள­வத்தை சவோய் திரை­ய­ரங்கின் பின்னால் சாலிமன்ட் வீதியில் அமைந்­துள்ள தனி­யா­ருக்கு சொந்­த­மான வரவேற்பு மண்­டபத்தின் பின்பகுதியிலுள்ள ஐந்து மாடிக்கட்டடம் சரிந்து விழும் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.

குறித்த காணொளியில், இளைஞர்கள் வழமைப் போன்று பணியில் ஈடுபட்டிருப்பதும் திடீரென கட்டடம் இடிந்து விழுவதும், இளைஞர்கள் தமது உயிரை பாதுகாத்துக்கொள்ள பதறியடித்து ஓடுவதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

குறித்த ஐந்து மாடிக் கட்டடம் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இடிந்து விழுந்­ததில் ஒருவர் பலியானதுடன் 23 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்­துடன் மேலும் இருவர் காணாமல் போயுள்­ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அன்னலட்சுமி என்ற பெண் ஒருவரும் பத்தனையைச் சேர்ந்து 20 வயதுடை ராமர் நிரோஷன் என்பவருமே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.

 காய­ம­டைந்­த­வர்கள் களு­போ­வில - கொழும்பு தெற்கு போதன வைத்­தி­ய­சா­லையிலும் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையிலும் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.  

நிலத்தின் கீழ் இரு மாடி­க­ளையும் நிலத்தின் மேல் ஐந்து மாடி­க­ளையும் கொண்ட உற்­சவ மண்­ட­பத்தின் பின்பகுதியே இவ்­வாறு இடிந்து வீழ்ந்துள்ளது. 

மண்­ட­பத்தின் நில மேல் மட்­டத்தில் அமைந்­துள்ள ஐந்து மாடி­களே இதன்போது இடி­பா­டு­க­ளுக்கு உள்­ளாகி சரிந்­துள்­ளன.  

மீட்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.