குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விசித்திரமான தீர்ப்பொன்றை பாகிஸ்தானிய நீதிமன்றமொன்று வழங்கியுள்ளது. 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள பாக்கர் நகரில் குழந்தையை கடித்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

மேலும் நாயிடம் கடிபட்ட குழந்தையின் பெற்றோர், பொலிஸில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் மரண தண்டனை உத்தரவை பிறப்பித்ததாக  பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நாய் செய்த குற்றத்திற்காக நாயின் உரிமையாளர் ஒருவார காலம் சிறைவாசம் அனுபவித்த நிலையில், நாயிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.