Diesel & Motor Engineering PLC (DIMO) மற்றும் Mahindra & Mahindra Ltd நிறுவனத்தின் விவசாய உபகரணப் பிரிவு (FES)ஆகியன ஒன்றிணைந்து Mahindra YUVO என்ற புதிய வகை டிராக்டர் வாகனங்களை அண்மையில் இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளன. 

அதிகமான பணி உள்ளடக்கம், வேகமான தொழிற்பாடு மற்றும் சிறந்த தரத்திலான உழைப்பு ஆகியவற்றிற்கான உறுதிமொழியுடன், 30-45 குதிரை வலு பிரிவில் அதிசிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட இப்புதிய யுகத்திற்கான டிராக்டர் வாகனங்களை அறிமுகம் செய்துள்ளதன் மூலமாக விவசாய தொழில்நுட்பத்தின் தரத்தை மேலும் ஒரு படி உயர்த்துவதற்கு Mahindra Tractors வழிகோலியுள்ளது.

தொழிற்துறையில் முதன்முறையாக இப்பிரிவில் 12F+3R பூரண constant-mesh gearbox என்ற தனித்துவமான தொழில்நுட்பத்துடன் முற்றிலும் புதிய ஒரு தளமேடையில் கட்டமைக்கப்பட்டுள்ள Mahindra YUVO, பன்முக ஆற்றல் கொண்டதுடன் 30 இற்கும் மேற்பட்ட, பல்வேறுபட்ட விவசாயத் தேவைகளுக்காக உபயோகிக்கப்படக்கூடியது. .

அதிகமான பணிகள், வேகமான இயக்கம் மற்றும் சிறந்த தரத்திலான உழைப்பினை அது வழங்குகின்றது. மேலும், YUVO இன் மேம்பட்ட தொழில்நுட்பமானது நிலத்தைப் பண்படுத்தல், அறுவடை செய்தல், அறுவடைக்குப் பின்னரான தேவைகள் என கிராமிய மற்றும் உள்நாட்டு விவசாயிகளின் பல்வேறுபட்ட தேவைகளை வேகமாகவும், சிறப்பாகவும் நிறைவேற்றிக் கொள்வதற்கு உதவுகின்றது.

Mahindra & Mahindra Ltd நிறுவனத்தின் பிரதித் தலைமை அதிகாரியும், விவசாய உபகரணப் பிரிவிற்கான (தெற்காசியா) சர்வதேச தொழிற்பாடுகளின் தலைமை அதிகாரியுமான சஞ்சய் ஜாதவ், இந்நிகழ்வில் உரையாற்றுகையில்,

 “எண்ணிக்கை அடிப்படையில் உலகின் முன்னிலை வகிக்கும் வர்த்தகநாமமாக Mahindra திகழ்வதுடன் பல்வேறு நாடுகளில் விவசாயிகளுக்கு தொழில்நுட்பத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற விவசாயரீதியிலான விசேட தீர்வுகளை வழங்கி, அவர்களின் எதிர்காலத்தை சுபீட்சமான ஒன்றாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற இலக்குடன் செயற்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் இலங்கையில் Mahindra YUVO இனை அறிமுகம் செய்து வைத்துள்ளமை எமது இலக்கினை நோக்கிய மற்றுமொரு படியாக அமைந்துள்ளதுடன். இத்தீவிலுள்ள விவசாயிகளின் மாற்றம் கண்டு வருகின்ற தேவைகளை ஈடுசெய்யும்.

வேறுபட்ட நாடுகளிலுள்ள பல்வேறுபட்ட விவசாய தேவைப்பாடுகள் தொடர்பான நுகர்வோரின் உள்ளார்ந்த கருத்துக்களின் அடிப்படையில் Mahindra YUVO வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே சந்தையில் தற்போது கிடைக்கப்பெறுகின்ற பல்வேறு ஆற்றல்கள் பொருந்திய, விவசாய தேவைகளுக்கான விசேட டிராக்டர் வாகனங்களில் ஒன்றாக இது திகழ்கின்றது.” என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் Mahindra டிராக்டர்களுக்கான ஒரேயொரு அங்கீகாரம் பெற்ற விநியோகத்தராகத் திகழ்ந்து வருகின்ற DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு. ரஞ்சித் பண்டிதகே கூறுகையில்,

“இலங்கையின் செழுமையான சமூக, கலாசார மற்றும் பொருளாதார சரித்திரமானது விவசாயம் மற்றும் அதன் நெல் அறுவடைப் பாரம்பரியத்துடன் ஆழமாக வேரூன்றியுள்ளது. கடந்த இரு தசாப்த காலமாக DIMO மற்றும் Mahindra Tractors ஆகியன ஒன்றிணைந்து, விவசாய பாரம்பரியங்களை மேலும் கட்டியெழுப்பும் வகையில் விவசாய தீர்வுகளை வழங்கி வந்துள்ளன.

இப்புதிய அறிமுகத்தின் மூலமாக, சிறப்பான பிரதிபலன் மற்றும் அதிக வருமானத்துடன் நவீனமயப்படுத்தப்பட்ட விவசாயத் தீர்வுகளை வழங்கி அதனை முன்னோக்கி வளர்ச்சி பெறச்செய்யும் இலக்கினை DIMO கொண்டுள்ளது. DIMO நிறுவனத்தின் மிகச் சிறந்த விற்பனைக்குப் பின்னரான சேவை, உறுதிமொழியை நிறைவேற்றுதல், நன்மதிப்பு மற்றும் நாடெங்கிலும் வியாபித்துள்ளமை ஆகியவற்றின் துணையுடன் இலங்கையின் கிராமப்புறங்களில் Mahindra Tractors தனது ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. எந்த வகையான மண்ணிலும், 30 இற்கும் மேற்பட்ட தேவைகளுக்கு பல்வேறு விதத்தில் பயன்படக்கூடிய வகையில் விவசாய தொழிற்பாட்டில் அதிசிறந்த செயற்திறனை வழங்கும் வகையில் பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் Mahindra YUVO வடிவமைக்கப்பட்டுள்ளது. DIMO வழங்கும் மீள் உத்தரவாதத்துடன், இலங்கையில் கிராமப்புற மற்றும் உள்நாட்டு விவசாய சமூகத்திற்கு மிகவும் உகந்த ஒரு டிராக்டராக Mahindra YUVO இனை மாற்றியமைத்துள்ளது.

நவீன பாணி, இயக்குபவரின் சௌகரியம் மற்றும் வசதியைப் பொறுத்தவரையில் புதிய தர ஒப்பீட்டு நியமத்திற்கு வழிகோலும் வகையில் Mahindra YUVO வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. அதன் மேம்பட்ட பரிவர்த்தனையானது தனித்துவமான 12F x 3R gear box தொழில்நுட்பத்தை வழங்குவதுடன், எந்தவொரு தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கும் விவசாயிகளுக்கு பல்வேறுபட்ட வேக தெரிவுகளை வழங்குகின்றது. முழு நிலை mesh gear box மற்றும் உச்ச சௌகரியத்தைத் தரும் வகையில் காரைப் போன்று பக்கவாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள gear அமைப்பு முறைமை ஆகியன மிகச் சுலபமாக அதனை இயக்குவதற்கு உதவுகின்றன. அதன் கோள கியர் அமைப்பு முறையானது YUVO இனை மிகவும் வலுவான டிராக்டராக மாற்றியமைத்துள்ளது.

இயக்குபவரின் தளமேடை மற்றும் சொகுசான ஆசனம், இலகுவாகவும், சிரமமின்றியும் எட்டக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நெம்புகள் மற்றும் அழுத்திகள் (levers & pedals) ஆகியன விவசாயிகள் சோர்வின்றி நீண்ட நேரம் உழைப்பதற்கு உதவுகின்றன.”