( ந.ஜெகதீஸ்)

புதிய அமைச்சரவை மாற்றத்தில் கால் நடைவள அமைச்சையோ கடற்தொழில் அமைச்சையோ தவிர்ந்த ஏனைய எந்தவொரு அமைச்சையும் பொறுப்பேற்கத் தயார் என வடிகாலமைப்பு மற்றும் நீர்வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஷா தெரிவித்தார்.

வடிகாலமைப்பு மற்றும் நீர்வழங்கல் முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கால் நடை வள, கடற்தொழில் ஆகிய அமைச்சுக்கள்  உயிரினம் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதனூடாக எனது இறுதிக்காலத்தில் பாவத்தை பொறுப்பேற்க நான் தயாரில்லை. குறித்த அமைச்சுக்களில் திருப்தியான மனதுடன் பணியாற்ற முடியாது. 

ஆகவே இவ்விரு அமைச்சுக்களை தவிர்ந்த ஏனைய எந்தவொரு அமைச்சையும் பொறுப்பேற்று அதனை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் நான் தயாராகவுள்ளேன். அதற்கான ஆளுமையும் என்னிடம் உள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் விரைவில் அமைச்சரவை மாற்றம் ஏற்படவுள்ளதாக தொடர்ந்தும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், வடிகாலமைப்பு மற்றும் நீர்வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஷா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.