தனது மகனும் சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியில் கல்வி கற்றுவருவதாக நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சைட்டம் தனியார் கல்லூரியை மூடினால்தான் அனைத்து பிரச்சினைகளும் தீருமென்றால் அதனை செய்ய முடியும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் ஏனைய தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளையும் மூட வேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனவும் தெரிவித்தார்.