சம்பியன் கிண்ணத் தொடருக்காக இந்திய அணியில் இடம்பிடித்திருந்த துடுப்பாட்ட வீரர் மனிஷ் பாண்டி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியின் போது இவர்  உபாதைக்குள்ளானதால் இவர் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மனிஷ் பாண்டிக்கு பதிலாக விக்கட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் தினேஸ் கார்த்திக் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

தினேஸ் கார்த்திக் இறுதியாக கடந்த 2014 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற ஆசிய கிண்ணத் தொடரில் தேசிய அணிக்காக இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.