ஆஸ்­தி­ரி­யா­வா­னது பொது இடத்தில் பெண்கள் இஸ்­லா­மிய முறைப்­படி முக்­காடு அணி­வ­தற்கு தடை விதிக்கும் சட்­ட த்தை நிறை­வேற்­றி­யுள்­ளது.

Image result for இஸ்லாமிய  virakesari

மேற்­படி சர்ச்­சைக்­கு­ரிய சட்­ட­மா­னது குடி­யேற்­ற­வா­சிகள் அந்­நாட்டு சமூ­கத்­து டன் ஒருங்­கி­ணைந்து கொள்­வது தொடர்­பான பயிற்சி வகுப்­பு­களில் கலந்து கொள்­ளவும் புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்கள் கட்­ட­ண­மின்றி பொதுச் சேவையில் ஈடு­ப­டவும் நிர்ப்­பந்­திக்­கி­றது. மேற்­படி சட்­டத்தின் பிர­காரம் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதத்­தி­லி­ருந்து  பல்­க­லைக்­க­ழ­கங்கள்,  நீதி­மன்­றங்கள் மற்றும் பொதுப் போக்­கு­வ­ரத்­து­களில் முக்­காடு மற்றும் முகத்தை மறை க்கும் வகையில் ஆடை அணி­ப­வர்கள் 130 ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான தண்டப் பணத்தை செலுத்த வேண்­டி­யி­ருக்கும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

புதிய விதி­களின் பிர­காரம் குடி­யேற்­ற­வா­சிகள்  ஆஸ்­தி­ரி­யாவில் தங்­கி­யி­ருப்­ப­தற்­ கான  சிறந்த வாய்ப்பை பெற்றுக் கொள்­வ­தற்கு சமுக ஒருங்­கி­ணைப்பு பாட­சா­லை யில் 12 மாத கால பயிற்சி வகுப்பில் பங்­கேற்க கோரப்­ப­டு­கி­றது.

அங்கு குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு ஜேர்­ம­னிய மொழிப் பயிற்­சிகள், மற்றும் ஆஸ்­தி­ரிய நாட்டு விழு­மி­யங்கள், கலா­சாரம், ஒழுக்க விதிகள் தொடர்­பான போத­னை கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. முக்­காடு அணி­வ­தற்கும் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிவதற்கும் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக  அந்நாட்டில் குடியேற் றவாசிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக் கது.