(க.கமலநாதன்)

மேல் மாகாணசபையில் கூட்டு எதிரணிக்கு ஆதரவளிக்கும் 38 பேர் தனித்து ஒரு அணியாக செயற்பட தீர்மானித்துள்ளனர். எதிர்காலத்தில் கூட்டு எதிரணிக்கான வரப்பிரசாதங்களை கோரி போராட்டங்கள் செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மேல் மாகாண சபையில் கூட்டு எதிரணிக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தனித்தரப்பாக செயற்பட தீர்மானித்துள்ளனர். நேற்று 17 ஆம் திகதி முதல் மேற்படி மாகாணசபை உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மேல் மாகண சபையிலுள்ள கூட்டு எதிரணிக்கு ஆதரவான உறுப்பினர்கள் சகலரும் நேற்று கடவதை சுமித்திரா மண்டபத்தில் கூடியபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.