முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : சம்பந்தன் உரையாற்ற வந்த போது குழப்பநிலை - Video

Published By: MD.Lucias

18 May, 2017 | 07:06 PM
image

 முள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கில்  இடம்பெற்றது.

இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் உரையை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்மந்தன் உரையாற்றினார். 

அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவர் திடீரென நீங்கள் பயங்கரவாதத்தை ஒழித்த அரசுக்கு நன்றி தெரிவித்து பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கின்றீர்கள்  அதற்கு என்ன பதில் சொல்கின்றீர்கள் எனக் கேள்வி எழுப்ப அங்கு குழப்பம் ஏற்பட்டது.

தொடர்ந்து பொது மக்களும்  எதிர்ப்பில் ஈடுப்பட்டனர். இது உரையாற்றும் இடமல்ல, இங்கு அரசியல் பேசாதீர்கள், நினைவேந்தல் நிகழ்வை அரசியலாக்காதீ;ர்கள், இது முள்ளிவாய்க்கால் முற்றம்,  என பொது மக்களும் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் தனது உரையை சுருக்கமாக முடித்துக்கொண்டு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்