ஏமனில் கொலரா நோயின் தாக்கத்தினால் கடந்த இரண்டு வாரங்களுக்குள் மாத்திரம் சுமார் 209 பேர் பலியாகியுள்ளதுடன், இதுவரை சுமார் 17ஆயிரத்திற்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு போர் இடம்பெற்றுவரும் ஏமனில், பாதிக்கப்பட்ட உணவு, மற்றும் சுத்தமற்ற குடிநீர் காரணமாக கொலரா நோய் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் ஏமனில் தினமும் 3 ஆயிர பேருக்கும் அதிகமானவர்கள் கொலரா நோய் பிடிப்பிற்குட்படுவதாகவும், ஒவ்வொரு 10 நிமிடத்திற் கொருமுறை, ஐந்து வயதிற்கும் குறைவான வயதை உடைய குழந்தை 1 இறக்கும் அபாயம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 

அத்தோடு ஏமனில் கொலரா நோய் காரணமாக கடந்த 18 மாதங்களில் சுமார் 10ஆயிரம் பேர் வரையில் இறந்துள்ளதுடன், 2 மில்லியன்பேர் வரை பதிப்படைந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தகவல் பகிர்ந்துள்ளது.

குறித்த நோய் தொற்று காரணமாக கடந்த வருடம் மாத்திரம் சுமார் 2ஆயிரம் பேர் வரியில் இறந்துள்ளதாகவும், அதில் அதிகளவானவர்கள் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய கிழக்கின் ஏழ்மையான நாடாக கூறப்படும் ஏமனில், உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும், அந்நாட்டு அரச படைக்குமிடையில் உளநாட்டு யுத்தம் இடம்பெற்று வருகின்றது. இதில் அரச படைகளுக்கு சவுதி அரேபியாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில் அந்நாட்டு மக்கள் சுகாதார வசதி இன்றி அவதிப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.