மட்டக்களப்பு பாலமுனை கடற்கரையோரத்தில் ஆணொருவரின் சடலம் ஒன்றினை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவலை வழங்கியதற்கு அமைய குறித்த இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லாறு பகுதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார். குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது