காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வுகள் முன்­னி­லையில் ஜனா­தி­பதி, பிர­தமர் பதி­ல­ளிக்­க­வேண்டும்

Published By: Robert

18 May, 2017 | 10:42 AM
image

(ஆர்.ராம்)

Image result for காணாமல் ஆக்கப்பட்டோரின் virakesari

ஜுலை மாதம் 5ஆம் திகதி் காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­களை கொழும்­புக்கு அழைத்து வரும்­போது ஜனா­தி­பதி, பிர­தமர் நேர­டி­யாக தமது கருத்­துக்­களைத் தெரி­விக்க வேண்டும் என்று காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் குடும்­பங்­களின் ஒன்­றியம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வு­க­ளுக்கு உட­ன­டி­யாக உரிய பதிலை அளிக்­கா­த­வி­டத்து புதிய ஆட்­சி­யா­ளர்கள் மீது மக்கள் கொண்­டுள்ள நம்­பிக்கை இல்­லாது போய்­விடும் எனவும் அவ்­வொன்­றியம் எச்­ச­ரித்­துள்­ளது.

காணாமல் போனோ­ருக்­கான சட்­ட­மூ­லத்தை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்­தியும், காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்­க­ளுக்கு ஒரு பதிலை அர­சாங்கம் வழங்க வேண்டும் எனக் கோரியும் எதிர்க்­கட்சித் தலை­வரின் அலு­வ­ல­கத்தில் மக­ஜரைக் கைய­ளித்த பின்னர் காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் குடும்­பங்­களின் ஒன்­றியத் தலைவர் பிட்டோ பெர்­னாண்டோ மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் மற்றும் அவர்­களின் பெற்றோர் சகோ­த­ரர்­களின் கையொப்­பங்கள் இடப்­பட்ட மக­ஜரை 25 சிவில் அமைப்­பு­களின் ஆத­ர­வுடன் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் குடும்­பங்­களின் ஒன்­றியம் ஜனா­தி­பதி, பிர­தமர், வெளிவி­வ­கார அமைச்சர் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் ஆகி­யோ­ரிடம் கைய­ளித்­துள்­ளது.

காணா­மல்­போ­னோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை அமைக்கும் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்டு எட்டு மாதங்கள் கடந்­துள்­ளன. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அணியின் பாரிய எதிர்ப்­புக்கு மத்­தியில் இந்த அர­சாங்­கத்­துக்கு காணப்­பட்ட முது­கெ­லும்பின் அடிப்­ப­டையில் சட்­ட­மூலம் பாரா­ளு­மன்றில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.

அன்று அனைத்து சிவில் அமைப்­பு­களும் இதற்கு வர­வேற்­ப­ளித்­தி­ருந்­தன. நாங்கள் எதிர்­பார்த்த அனைத்தும் அதில் இல்­லா­வி­டினும் உற­வுகள் எதிர்­பார்த்­தி­ருந்த சில விடயங்­களை அதில் பூர்த்­தி­செய்­து­கொள்ளக் கூடி­ய­தாக உள்­ளது. காணா­மல்­போ­னோர்கள் தொடர்பில் எதிர்­கா­லத்தில் பய­ணிக்க இதனை ஒரு வழி­யா­கவும் நாங்கள் கரு­தினோம்.

ஆனால், எட்டு மாதங்கள் கடந்து இந்தச் சட்­ட­மூலம் நடை­மு­றைக்கு வர­வில்லை. சர்­வ­தேச விசா­ர­ணையைக் கோரு­கின்­றனர், நீதியை நிலை­நாட்­டு­வதில் அரசு மீது நம்­பிக்கை இல்லை என்ற வாதங்கள் மேலோங்­கி­யுள்­ளன. அர­சாங்கம் நிறை­வேற்­றி­யுள்ள இந்தச் சட்­ட­மூ­லத்தில் காணா­மல்­போனோர் தொடர்பில் உண்மை வெளிக்­கொண்டு வரப்­ப­டு­மாயின் புதிய அர­சாங்­கத்தின் மீதும் ஆட்­சி­யா­ளர்கள் மீதும் மக்கள் நம்­பிக்­கையைக் கொள்­வார்கள்.

ஜனா­தி­ப­தியால் இதனை சுல­ப­மாக செய்­ய­ மு­டியும். குறித்த அலு­வ­ல­கத்தை எந்த அமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்று அவர் உட­ன­டி­யாக தீர்­மா­னித்து சட்­ட­மூ­லத்தை நடை­மு­றைக்கு கொண்­டு­வர வேண்டும். இந்த அலு­வ­லகம் இயங்­கு­வ­தற்­கான நிதியை வழங்­கவும் கடந்த வரவு செல­வுத்­திட்­டத்தில் ஏற்­பா­டுகள் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தன.

ஜுலை மாதம் 5ஆம் திகதி நாங்கள் காணா­மல்­போ­னோரின் உற­வு­களை கொழும்­புக்கு அழைத்து வருவோம். அப்­போது ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் ஆகியோர் நேர­டி­யாக விஜயம் செய்து இந்த விடயம் தொடர்பில் நேரில் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.

அரசாங்கத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைக்கத் தொடர்ந்தும் தயாராகவே உள் ளோம். எனவே, இதற்கு உரிய பதிலை அரசு வழங்கி நல்லிணக்கத்தின் அடுத்தகட்டத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். இல்லாவிடின் இந்த அரசாங்கம் மீதான மக்கள் நம்பிக்கை உடைந்துபோய்விடும் என் றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10