ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் தொடரில் நேற்று நடைபெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணியுடனான போட்டியில் இலங்கை அணி சிறப்பான வெற்றியினை பதிவுசெய்துள்ளது.

இலங்கை அணி 33-17 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றதுடன், ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் டிவிசன் 1 சம்பியின் பட்டத்துக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.

 இலங்கை அணி ஆரம்பம் முதலே போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. முதற்பாதியில் 18 - 17 என்ற அடிப்படையில் போட்டியை தக்கவைத்த இலங்கை அணி தொடர்ந்தும் சிறப்பாக செயற்பட்டு 33-17 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது.

இதேவேளை இலங்கை அணி தனது முதல் போட்டியில் பிலிப்பைன்ஸ் அணியை 24-13 என்ற அடிப்படையில் வீழ்த்தியிருந்தது.

ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் நடைபெற்றுவருவதுடன், இந்த தொடரில் இலங்கை, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.