ஐ.பி.எல்.தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஹைதராபாத் அணியை வெற்றிக்கொண்ட கொல்கத்தா அணி அரையிறுதியில் மும்பை அணியுடன் மோதவுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி கடும் சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றது.

ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக டேவிட் வோர்னர் 37 ஓட்டங்களையும், கேன் வில்லியம்ஸன் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட கால்டர் நெயில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் போட்டியின் இரண்டாம் பாதி தொடங்குவதற்கு முன்னர் கடுமழை பெய்ததால் டக்வர்த் லிவிஸ் முறைப்படி கொல்கத்தா அணிக்கு 6 ஓவர்களில் 48 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியின் ஆரம்ப மூன்று விக்கட்டுகள் 12 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

எனினும் நிதானமாக துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியின் தலைவர் கௌதம் கம்பீர்  32 ஓட்டங்களை பெற்று அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக கால்டர் நெயில் தெரிவுசெய்யப்பட்டார்.