மட்டக்களப்பு ஆரயம்பதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.

சுமார் 29 வயது மதிக்கத்தக்க முகமட் மஷ்பி என்பவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி போலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாகிச்சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.