ஆப்கானிஸ்தானில் பிறந்த பெண் விமானி ஒருவர் தனியாக உலகம் முழுவதும் விமானத்தில் சுற்றி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷயஸ்தா வயஷ் என்ற பெண் விமானி, சுமார் 40,000 கிலோ மீற்றர் தூரம் பறந்து உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளார். 

மேலும் தனியாக தனது பயணத்தை அமெரிக்காவின் புளோரிடாவில் மாநிலத்திலுள்ள டேடோனா கடற்கரை விமான நிலையத்திலிருந்து இம்மாதம் 13 ஆம் திகதி ஆரம்பித்துள்ள நிலையில், அவர் ஸ்பெயின், எகிப்து மற்றும் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

சோவியத் போர் இடம்பெற்ற காலத்தில் ஆப்கானிஸ்தான் அகதிகள் முகாமில் பிறந்துள்ள இவர், அமெரிக்காவில் விமானி பயிற்சியை பெற்று, ஆப்கானிஸ்தான் பயணிகள் விமானத்தின் மிக இளமையான விமானியாக பணியாற்றுபவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.