கடல் பாதுகாப்பு அலுவல்கள் வசதிகளை வழங்குதல்  தொடர்பாக இலங்கை மற்றும் நெதர்லாந்து அரசாங்கங்களுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று நேற்று பாதுகாப்பு அமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த உடன் படுக்கையின் பிரகாரம், இந்து சமுத்திரத்திற்கருகாமையில் வரும் நெதர்லாந்து நாட்டின் வர்த்தக கப்பல்களுக்கு இலங்கை கடற்படை பாதுகாப்பு வசதிகளை செய்வதற்கான ஒப்பந்தமே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் ஜோன்னி டூர்னிவாட்கிடையில் பாதுகாப்பு  அமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.