கோவை மருத்துவ மையம் மற்றும் வைத்தியசாலையின் துணை தலைவராகவும், கல்வி குழுமங்களின் நிர்வாக பொருளாளராகவும் பதவிவகித்துவரும் வை. தவமணி டி.பழனிசாமி அவர்கள் இலங்கை மாணவர்களுக்கு பணி வாய்ப்புடன் சிறந்த பட்டப்படிப்புகள் வழங்கிவருவதை குறித்து கூறுகிறார்.

'எங்களுடைய கல்விக் குழுமங்களில் நிறைய இலங்கை மாணவர்கள் படித்துவருகிறார்கள், என்னுடைய தனிப்பட்ட முறையிலேயே அவர்களை நான் சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவர்கள் கல்வியில் அதிக ஞானமும், வகுப்புகள் ஒழுக்கத்தையும் கடைபிடித்து வருகிறார்கள்.'

எங்களுடைய வைத்தியசாலைக்கு தேவைப்படும் மருத்துவ உதவியாளர்கள், மருத்துவ ஆய்வக பணியாளர்கள், செவிலியர், கள பணியாளர்கள், இயன்முறை மருத்துவர்கள் போன்றவர்களுக்காக நாங்கள் எங்களுடைய மருத்துவ வளாகத்திலேயே தனியாக பயிற்சி கல்லூரி ஒன்றினையும் தொடங்கி, பயிற்சி அளித்து, பணி வாய்ப்பையும் வழங்கிவருகிறோம். இதனால் ஆய்வகம், மருந்தகம், இயன்முறை மருத்துவம், செவிலியர் சேவை ஆகியவற்றை தடையின்றி தரத்துடன் வழங்க இயலுகிறது. 

பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டயச் சான்றிதழுக்கான செவிலியர் பயிற்சி கல்லூரி, ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்டிற்கான பயிற்சி கல்லூரி மற்றும் கலை கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆகியவற்றையும் நாங்கள் நடத்தி வருகிறோம். எங்களுடைய கலை அறிவியில் கல்லூரியில் ஏராளமான இலங்கை மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். எங்களுடைய பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் விரும்பினால் அவர்களை தொழில் முனைவோர்களாகவும், சிறு தொழில் அதிபர்களாகவும் பயிற்சி அளிக்கிறோம். கல்வி தொடர்பான குழப்பம் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு முறையான ஆலோசனையையும் இலவசமாக வழங்கி வருகிறோம். எங்களுடைய வெற்றியில் மாணவ மாணவிகளின் கருத்தொற்றுமை, பெற்றோர்களின் ஆதரவு, ஆசிரியர்களின் தன்னலமற்ற உயர்ந்த நோக்கம் ஆகியவற்றிற்கும் பங்குண்டு.

வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனை என்ன?

பெரும்பாலான மாணவர்களுக்கு நாங்கள் ஆலோசனை வழங்கும் போது அவர்களின் விருப்பத்தினை அறிந்து அதற்குரிய கல்வியை கற்பதற்கு அனுமதி அளிக்கிறோம். கட்டணமும் நியாயமானது. படிப்பு முடித்தவுடன் பணி வாய்ப்பு உண்டு. அவர்கள் சர்வதேசஅளவில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம். பாரா மெடிக்கல் கல்வியை கற்க விரும்பும் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் விண்ணப்பித்து, தகுதி பெற்றவுடன் நாங்கள் எங்களுடைய மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கான சீட்டை தருகிறோம். அவர்கள் படித்து முடித்தவுடன் இங்கேயே பணியாற்ற விருப்பம் தெரிவித்தால் அவர்களின் திறமைக்கேற்ப நாங்களே பணி வாய்ப்பையும் அளிக்கிறோம்.

ஷிவான்தி முரளிதரன் 3ம் ஆண்டு மேலாண்மை பட்டப் படிப்பு மாணவி:

இந்த கல்லூரி அதிகமாக வசதிகள் உள்ளது. என்னுடைய சொந்தகாரர்கள் நிறையப் பேர் இந்த கல்லூரியில் படித்துள்ளார்கள். அவர்கள் மூலமாக தான் எனக்கு இக்கல்லூரி அறிமுகமானது. தற்போது நான் இறுதி ஆண்டு பயின்றுக் கொண்டிருப்பதினால், வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். அத்தோடு விடுதி வசதியும் நன்றான முறையில் அமைந்திருக்கிறது. இலங்கை விட்டு வேறு இடத்திற்கு வந்தது, முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், மிகவும் குறுகிய ஒரு காலத்தில் அவை சரியாகி விடுகிறது.

காயத்ரி ஜெயப்பிரகாசம் 3ம் ஆண்டு பி.காம் ஐடி மாணவி:

நான் இலங்கை கண்டியில் வசிக்கிறேன். க.பொ.த உயர்தரம் கல்வி முடித்திருக்கிறேன். என்னுடைய உறவினர்கள் மூலமாக தான் இக்கல்லூரியின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. பி.காம் பட்டப்படிப்பில் பல பிரிவுகள் உள்ளது. அதில் நான் பி.காம்  Information Technology பட்டப்படிப்பை தேர்வு செய்து படித்துவருகிறேன். ஆசிரியர்களும் நல்ல முறையில் பாடம் கற்பிப்பதுடன் வேலைவாய்ப்பு கிடைக்கவும் உதவுகிறார்கள். தற்போது நான் ஒரு நிறுவனத்தில் தேர்வாகியுள்ளேன். இந்தியாவைப் பொருத்தளவில் ஆங்கிலத்திற்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே ஆங்கிலத்தில் Basic மற்றும் Advanced level-லில் C Pass இருக்க வேண்டும். பொறியியல் பட்டப்படிப்பில் சேர O Level முடித்திருந்தாலும் போதுமானது. 

சஜினி சுந்தர்ராஜா 3ம் ஆண்டு பிபிஏ சிஏ மாணவி:

நான் கொழும்புவில் வசிக்கிறேன். என்னுடைய அண்ணன் மூலமாக தான் இக்கல்லூரியின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. தற்போது இளங்கலை மேலாண்மை பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். எங்களுடைய துறையில் எல்லா ஆசிரியர்களும் மிகவும் அன்பானவர்கள். எங்களை பிரித்துப் பார்க்காமல் தனி அக்கரை மற்றும் தனி மரியாதையுடன் நடத்துகிறார்கள். தொடக்கத்தில் எனக்கு மேடை பயம் அதிகமாக இருந்தது. இங்கு தொடர்ந்து நடத்தப்படும் கருத்தரங்குகளில் பங்கேற்று அதில் சுமார் 15க்கும் மேற்பட்ட வகுப்பு கருத்தரங்கில் நான் எடுத்துள்ளேன். இந்தியாவைப் பொருத்தவரையில் பட்டப்படிப்பு சரியான நேரத்தில் படிப்பு முடித்துவுடன்; நம்மிடம் வந்து சேர்ந்துவிடும்.

மேலும், இலங்கையைப் பொருத்தவரையில் A Level தேர்வு எழுதி முடித்தப்பின் Zet Score-- அடிப்படையில் தான் பல்கலைகழக ரேங்கிங் இருக்கும். நல்ல படிக்கும் மாணவரை ஏதோ ஒரு காரணத்தினால் Zet Score குறைந்தால் அவர்களால் பட்டப்படிப்பு படிக்கமுடியாத நிலை இருக்கிறது. அதற்காக ஒரு மிகப்பெரிய மாற்றாக தான் இந்தியாவில் கல்வி இருக்கிறது. இங்கும் தமிழ் பேசுவதால் மொழி கூட தடையில்லை.

ப்ரியாழினி மாரிமுத்து 3ம் ஆண்டு மேலாண்மை மாணவி:

என்னுடைய உறவினர் ஒருவர்தான் இக்கல்லூரியில் பயின்றால் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அறிவுறுத்தினர். அதனால் இக்கல்லூரியில் இணைந்தேன். தொடங்கத்தில் புது நாட்டிற்கு போகிறோமே, தனிமையில் இருக்கப் போகிறோமே என்கிற ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் இங்கு வந்தப்பின் எல்லாம் மாறிவிட்டது. பலரும் பல்வேறு இடங்களிலிருந்து வந்து இங்கு படிக்கிறார்கள். இதனால் பல்வேறு மொழிகளையும் என்னால் கற்றுக்கொள்ள முடிகிறது. தற்போது என்னால் ஹிந்தி எழுதவும் பேசமும் முடியும்.

விடுதிகள் எங்களுக்கு வீட்டைப் போல தான் இருக்கிறது. சரியாக நேரத்தில் சாப்பிடவும், ஒழுக்கங்களும் கற்றுக் கொள்கிறோம். படிப்பிற்கும் அதிகம் உதவுகிறார்கள். எங்களுக்கென தனி கவனம் அளித்து கற்பிக்கிறார்கள். மிகவும் குறுகிய காலத்தில் இங்கு பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது. இவ்வாண்டும் பல இலங்கை மாணவர்கள் எங்கள் கல்வி நிறுவனங்களில் சேர ஆவலாக உள்ளார்கள். அவர்களுக்காகவே யாழ்ப்பாணத்தில் மே 19, 20, 21 ஆகிய திகதிகளில் நடைபெறுகிற Expo வில் கலந்து கொள்கிறோம். மாணவர்கள் நேரில் வந்து ஆலோசனை பெறலாம். For Para Medical Courses 0091-9944444028, Eng.: 0091-9944467046, Arts: 0091-9942045221