இப்புதிய தொகுதியானது நீர்ப்பம்பியின் தொழிற்பாட்டு நேரத்தை இரட்டிப்பாக்கியுள்ளது நீர் முகாமைத்துவ தொகுதிகள் மற்றும் தீர்வுகளை வழங்குவதில் இலங்கையில் முன்னிலை வகித்து வருகின்ற நிறுவனங்களுள் ஒன்றான Jinasena (Pvt) Limited, நாட்டின் விவசாயத் துறையை சரியான நேரத்தில் மேம்படுத்துவதற்காக சூரிய நீர்ப்பாசன தொகுதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜினசேன சூரிய நீர்ப்பாசன தொகுதியானது ஜினசேன நீர்ப்பம்பி ஒன்று, சூரிய கலங்கள் மற்றும் மாற்றி (inverter) ஒன்றையும் உள்ளடக்கியுள்ளது. எந்த வகையான தோட்டத்திற்கும் இதனை பயன்படுத்தக்கூடியதாக உள்ளதுடன்ரூபவ் சந்தையில் கிடைக்கப்பெறும் இத்தகைய ஏனைய தொகுதிகளிலும் பார்க்க உயர் மட்டத்திலான திறனையும் கொண்டுள்ளது. 

சந்தையில் கிடைக்கப்பெறுகின்ற சாதாரண சூரிய நீர்ப்பாசன தொகுதியானது நாளாந்தம் மொத்தமாக 4-5 மணித்தியாலங்களுக்கு நீரை இறைப்பதற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற அதேசமயம், ஜினசேன வழங்கும் தீர்வானது நாளாந்தம் 4-5 மணித்தியாலங்கள் உச்ச தொழிற்பாட்டுத் திறனுடன்ரூபவ் 10 மணித்தியாலங்கள் வரை நீரை இறைப்பதற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது. 

இத்தகைய உயர் மட்டத்திலான திறனைக் கொண்டுள்ளமையால், மாறுபடும் காலநிலைமைகள் காரணமாக, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சூரிய ஒளி கிடைக்கப்பெறுகின்ற நாட்டின் மலைநாட்டுப் பகுதிகளிலும் இதனை பயன்படுத்த முடியும். ஜினசேன சூரிய நீர்ப்பாசன தொகுதியை தேவைக்கேற்றவாறு வடிவமைப்புச் செய்து கொள்ள முடியும், அத்துடன் இலகுவில் பொருத்தக்கூடியதாக உள்ளதுடன், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இலகுவாக எடுத்துச் செல்லவும் முடியும்.

இத்தொகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள மாற்றிகளுக்கு 10 வருட உத்தரவாதத்தையும், உற்பத்திற்கு 20 வருட உத்தரவாதத்தையும், சூரிய கலங்களுக்கு 30 வருட செயற்திறன் உத்தரவாதத்தையும் நிறுவனம் வழங்குகின்றது. மேலும், அனைத்து சூரிய நீர்ப்பாசனத் தொகுதிகளுக்கும் 10 வருட உத்தரவாதத்தையும் ஜினசேன வழங்குகின்றது.

கல்பிட்டிய பிரதேசத்தில்ரூபவ் தோட்டங்கள் மற்றும் நெல் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கான மாதிரி செயற்திட்டத்தை மாகாண விவசாய அமைச்சரான சுமால் திசேரா ஆரம்பித்து வைத்துள்ளதுடன், இத்திட்டத்திற்கு பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது. விவசாயிகள், இந்த புதுமையான முறையை உபயோகித்து தங்களது தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதை அவர்களுக்கு பரீட்சயப்படுத்தும் முகமாகரூபவ் திருகோணமலை, கதிர்காமம் மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களிலும் மேலதிக மாதிரி செயற்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. விவசாய தேவைகளுக்கு புறம்பாக, தண்ணீர் தாங்கியை உபயோகித்து வீட்டுத் தேவைகளுக்கும் இத்தொகுதியை உபயோகிக்க முடிவதுடன், தொழிற்சாலைகள் மற்றும் களஞ்சியசாலைகளிலும் கைத்தொழில் தேவைகளுக்கும் உபயோகிக்க முடியும்.

ஜினசேன சூரிய நீர்ப்பாசன தொகுதிகள் தொடர்பில் ஜினசேன நிறுவனத்தின் எரிசக்தி துறையின் சிரேஷ்ட பொறியியலாளரான ஜயன் ஷிராந்த மென்டிஸ் கருத்து தெரிவிக்கையில்,

“நீர்ப்பம்புகள் மற்றும் சூரிய தொகுதிகள் ஆகிய நாம் நிபுணத்துவம் பெற்ற இரு உற்பத்திகளையும் ஒன்றிணைத்து ஜினசேன சூரிய நீர்ப்பாசன தொகுதிகளை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாக காணப்படுவதுடன், வருடத்தின் பெரும்பாலான காலப்பகுதியில் சூரிய ஒளி தாராளமாகக் கிடைக்கப்பெறுகின்ற இலங்கை போன்ற நாட்டுக்கு இது மிகவும் உகந்த ஒரு தீர்வாக அமைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார். 

விவசாயத் துறையில் அதிகரித்து வருகின்ற கேள்விகளை ஈடுசெய்வதற்கு இத்தகைய பேண்திறன் கொண்ட, புத்தாக்கமான முறைகளே மிகச் சிறந்த வழிமுறைகளாக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். “இத்தொகுதிகளை சந்தையில் எல்லோரும் மிக இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு வழிகோலும் வகையில், 0% வட்டியுடன் தவணைக் கொடுப்பனவு முறையில் இத்தொகுதிகளைக் கொள்வனவு செய்யும் வாய்ப்பினை குறிப்பிட்ட வங்கிகளின் கடனட்டை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளோம்.” என்று தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

கொழும்பு, பண்டாரவளை, புத்தள, கிரந்துருகோட்டே, பேருவளை, ஏக்கல, அவிசாவளை, தம்புள்ளை, கண்டி, நுவரெலியா, காலி, கதுருவெல, தம்புத்தேகம, அனுதாரபுரம், குருணாகல், திருகோணமலை, அம்பாறை, எம்பிலிப்பிட்டிய மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 19 சேவை மையங்களின் வலையமைப்பின் மூலமாக ஜினசேன சூரிய நீர்ப்பாசன தொகுதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். உற்பத்திகள் அனைத்திற்கும் உத்தரவாதம் கிடைக்கப்பெறுவதுடன், உயர் நம்பிக்கை மிக்க விற்பனைக்குப் பின்னரான சேவை மற்றும் தாராளமாகக் கிடைக்கும் உதிரிப்பாகங்களையும் கொண்டுள்ளன.

1905 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஜினசேன லிமிட்டெட் நிறுவனம், இலங்கைக்கு சொந்தமான முதலாவது பொறியியல் நிறுவனமாகத் திகழ்வதுடன், 1932 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள ஐந்து முன்னணி பொறியியல் நிறுவனங்களுள் ஒன்றாகவும் தரப்படுத்தப்பட்டிருந்தது. 1950 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் ஸ்தாபகரான ரீ. எஸ். ஜினசேன அவர்களின் புதல்வன், ஜினசேன பெயரின் கீழான முதலாவது நீர்ப்பம்பியை வடிவமைத்து, உற்பத்தி செய்திருந்தார். அது தற்போதும் முழுமையாக இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஒரேயொரு நீர்ப்பம்பியாகத் திகழ்ந்து வருகின்றது. அதன் வலிமையான கட்டுமானம், நிரூபிக்கப்பட்ட வழித்தடம், உதிரிப்பாகங்கள் இலகுவாக கிடைக்கப்பெறுதல் மற்றும் நன்மதிப்புக் கொண்ட விற்பனைக்குப் பின்னரான சேவை காரணமாக இலங்கையில் தொடர்ந்தும் கணிசமான சந்தைப் பங்கினை தன்வசம் கொண்டுள்ளது. நீர்ப்பம்பி தீர்வுகள், நீர்ப்பாசன தீர்வுகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு தீர்வுகள் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள ஜினசேன நிறுவனம், அதன் மூலமாக ஒரே கூரையின் கீழ் நீர் முகாமைத்துவ தீர்வுகளை (தேசிய மின் விநியோகத்துடன் இணைந்த மற்றும் இணையாத) வழங்கும் ஒரு சில நிறுவனங்களுள் ஒன்றாகவும் திகழ்ந்து வருகின்றது. மேலும், “நம்பிக்கைமிக்க ஒரு நாமம் மற்றும் பல வாய்ப்புக்கள்” என்ற தனது மகுட வாக்கியத்திற்கு அமைவாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகள் மற்றும் விவசாய இயந்திரங்கள் போன்ற துறைகளிலும் ஈடுபட்டுள்ளது.