கிழக்கில் இன­மு­று­கலை ஏற்­ப­டுத்­த ஞான­சார தேரர் முயற்சியா?

Published By: Robert

17 May, 2017 | 10:13 AM
image

ஞான­சார தேரரின் தொடர்ச்­சி­யான கருத்­துக்கள் நாட்டின் நீதித்­து­றையை கேள்­விக்­குட்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளன என்று  கிழக்கு  மாகாண  முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரி­வித்தார்,

Image result for ஞான­சார தேரர் virakesari

நாட்டின் சட்டம் ஒழுங்­கை சீர்­கு­லைக்கும் வித­மா­க தீவி­ர­வாத ரீதியில் கருத்­துக்­களை  வெளியிட்டு வரும் ஞான­சார தேரரின் கருத்­துக்கள் இலங்­கையின் தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கும் ஜன­நா­ய­கத்­திற்கும் பாரிய அச்­சு­றுத்­த­லாக அமைந்­துள்­ள­தா­கவும்  கிழக்கு முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்­பிட்டார். 

அண்­மையில் ஞான­சார  தேரர்  இஸ்­லா­மிய மதத்­தையும் சிறு­பான்­மை­யி­னரை தூற்­றியும் தெரி­வித்த கருத்­துக்கள் தொடர்பில் வின­விய போதே கிழக்கு முத­ல­மைச்சர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும்  கிழக்கு முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்­பி­டு­கையில்  

சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வ­தற்கே இந்த நாட்டில் பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­த­கைய நோக்­கத்­தையே கேலிக்­குள்­ளாக்கும் வகையில் தம்மை உத்­தி­யோ­கப்­பற்­றற்ற பொலிஸ் பிரிவு என அழைத்துக் கொள்­வதை  நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்­குற்கு ஏற்­பட்ட  அபா­ய­மா­கவே கருத வேண்­டி­யுள்­ளது,

அது மாத்­தி­ர­மன்றி   ஏற்­க­னவே அளுத்­த­கமை மற்றும் சில பகு­தி­களில் ஏற்­பட்ட இன­மு­று­கல்­க­ளுடன் இவரின் பெயர் இணைத்துக் கூறப்­பட்டு வரும் நிலையில் கிழக்கில் பாரிய இன­மு­று­கலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான  பின்­ன­ணி­யொன்றை தற்­போது ஞான­சார தேரர் உரு­வாக்கி வரு­கின்­றாரா என்ற சந்­தேகம்  தோன்­றி­யுள்­ளது.

கிழக்கில் இது­வரை மூவின மக்­களும்  ஒற்­று­மை­யுடன் வாழ்ந்து வரு­கையில்  அண்­மைக்­கா­ல­மாக இன­வாத செயற்­பா­டு­களை பரப்பும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

இதன் போது  சட்டம் ஒழுங்கை பாது­காக்க வேண்­டிய பாது­காப்புத் தரப்­பினர் நடந்து  கொள்­கின்ற முறை குறித்து  பொது­மக்­களால் விசனம் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதனால் தான் நாம்  பொலிஸ் அதி­கா­ரத்தை கேட்­கின்றோம். எமக்கு பொலிஸ் அதி­காரம் கிடைக்கும் பட்­சத்தில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் பாது­காப்­பது  எவ்­வாறு  என்­பதை நாம் காட்­டு­கின்றோம். 

அது மாத்­தி­ர­மன்றி ஞான­சார தேரரின்  முஸ்­லிம்­களை சீண்டிப் பார்க்கும் வித­மான  கருத்­துக்கள் தொட­ரு­மானால் அதன் விளை­வுகள் விப­ரீ­த­மாக அமை­யலாம் என்­பதை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன். 

இதே­வேளை நான் கிழக்கில் விஹா­ரை­களை  அமைப்­ப­தற்கு  எதி­ராக இருக்­கின்றேன் என்­ற­தொரு கருத்தை அண்­மைக்­கா­ல­மாக ஞான­சார தேரர் உட்­பட சில பெரும்­பான்மை  அர­சி­யல்­வா­தி­களும் பரப்பி வரு­கின்­றனர். 

பௌத்த மக்கள்  செறிந்து வாழும் பகு­தி­களில் அவர்கள்  வாழும் இடங்­களில் அவர்­க­ளு­டைய மத­வ­ழி­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு நான் ஒரு போது் தடை­யா­ன­வ­னு­மல்ல. என்னால்  தடை போடவும் முடி­யாது. அவர்­க­ளு­டைய மத சுதந்­தி­ரத்தை நான் ஒரு போது தடை செய்ய முடி­யாது.

ஆனால் அவர்கள் முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் வாழும் பகு­தி­களில் விஹா­ரை­களை எழுப்­பு­வதும் சிலை­களை  வைப்­பதும் தான் இன்று பிரச்­சி­னை­யா­க­வுள்­ளன.பௌத்த பக்­தர்கள் உள்ள இடத்தில் தான் விஹா­ரைகள் எழுப்­ப­பட வேண்டும் ஆனால் முஸ்­லிம்­களும் இந்து பக்­தர்­களும் இருக்கும் இடத்தில் விஹா­ரையை கட்டி யார் வணங்கப் போகின்­றார்கள்?

அது மாத்­தி­ர­மன்றி  முக்­கிய மதிப்­புக்­கு­ரிய பௌத்த தேரர்­களே  இந்த செயல்­களை வெறுத்து ஒதுக்கும் போது  சிலர் அர­சியல் நோக்­கத்­துடன் இவ்­வா­றான நிகழ்­வு­களை முன்­னெ­டுப்­பது விமர்­சிக்­கத்­தக்­கது. 

என் மீது  எவ்­வா­றான  அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்­டாலும் என்ன விமர்­ச­னங்­களை முன்­வைத்­தாலும் அவற்­றுக்கு அஞ்சி வாய் மூடி மௌனி­யாக இருக்கப் போவ­தில்லை. சிறு­பான்­மை­யி­னரின் நலன்கள் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுமானால் அதற்கு எதிராக குரல் எழுப்ப நான் ஒரு போதும் தயங்கப் போவதில்லை,

நாமும் இந்த நாட்டின் மதிப்புக்குரிய பிரஜைகள் தான் , எல்லோரையும் போன்று உரிமைகள் எமக்கும் உள்ளன. எமது சுதந்திரத்தின் மீதும்  உரிமைகள் மீதும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுமானால் நாம் அதை கை கட்டி வாய்மூடி பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15