இன்றைக்கு வெள்ளை வெளேர் என இருக்கும் அரிசியில் வடித்த சாதத்தைத்தான் நாம் எல்லோருமே விரும்பிச் சாப்பிடுகிறோம். அதாவது, நெல்லின்  மேல் தோலான உமி, உள் தோலான தவிடு அத்தனையும் நீக்கப்பட்டு, பலமுறை சுத்தம் செய்யப்பட்டு, வெறும் சக்கையாகத்தான் நமக்கு வெள்ளை அரிசி கிடைக்கிறது.

சிவப்பு அரிசியை நாம் பயன்படுத்துவது வெகு குறைவாகிவிட்டது. நார்ச்சத்தும் (Fiber) செலினியமும் (Selenium) மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, விற்றமின் ஈ, நம் உடல் முழுக்க இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது.

இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும்; ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்; மூட்டுவலி வீக்கத்தைக் (Rhemetoid Arthritis) குறைக்கும் சிவப்பு அரசியை  பயன்படுத்தி  நோயற்ற வாழ்வு வாழ்வோம்..