அழிவின் விளிம்பில் ஆதிகால நாகரிகம் - மொஹெஞ்சதாரோ!

Published By: Devika

16 May, 2017 | 11:23 AM
image

உலகின் ஆதிகால நாகரிகங்களுள் முக்கியமான ஒன்றாகிய மொஹெஞ்சதாரோ கொஞ்சம் கொஞ்சமாக அழிவடைந்து வருவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதிகால நாகரீகத்தின் மிக முக்கிய கேந்திரமாகக் கருதப்படுவது மொஹெஞ்சதாரோ. இது, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ளது. கிறிஸ்துவுக்கு முன் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் மொஹெஞ்சதாரோவாசிகளால் கட்டப்பட்ட கழிவகற்றும் அமைப்பு மற்றும் நீர்ப் பங்கீட்டுப் பொறிமுறை என்பன இங்குதான் இருக்கின்றன.

சுமார் ஐயாயிரம் ஆண்டு பழைமையான இந்த நாகரிகம் எவ்வாறு அழிந்துபட்டது என்பது இதுவரையில் மர்மமாகவே இருக்கிறது.

இந்தப் பகுதியில் உரிய முறையில் ஆய்வுகளை நடத்தினால் மொஹெஞ்சதாரோ காலத்து மக்களின் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல இரகசியத் தகவல்களைக் கண்டறியலாம். என்றபோதும், அதிகரித்து வரும் வெப்ப நிலை மற்றும் உரிய பராமரிப்பு இல்லாததால் இப்பகுதி வேகமாக மேலும் சிதைவடைந்து வருகிறது.

பாகிஸ்தான் அரசு இதை உரிய முறையில் பாதுகாக்கத் தவறி வருவதால், விரைவில் உலக சரித்திரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதி அழிந்து போய்விட வாய்ப்புள்ளது என்று பதறுகிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right