சர்வதேச வெசாக் மாநாட்டில் மதகுரு போன்று வேடமிட்டு கலந்துகொண்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச வெசாக் மாநாடு பண்டாநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது நபரொருவர் மதகுரு  போன்று வேடமிட்டு  சர்வதேச வெசாக் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைசெய்த பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.