சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பெண் : அனுராதபுரத்தில் சம்பவம்!.

Published By: Robert

16 May, 2017 | 10:44 AM
image

பாட­சாலை சிறுவன் ஒரு­வனை பல தட­வைகள் பாலியல் ரீதி­யாக பலாத்­காரம் செய்த 28 வயது பெண்­ணுக்கு மூன்று வருட கடூ­ழிய சிறைத் தண்­டனை விதித்து அனு­ரா­த­புர மேல் நீதி­மன்றம் நேற்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது. அனு­ரா­த­புரம் சிறப்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மகேஷ் வீரமன் இந்த தீர்ப்­பிணை வழங்­கினார்.

 அனு­ரா­த­புரம் பேம­ம­டுவ - அலி­வங்­குவ பகு­தியைச் சேர்ந்த பிரி­யங்­கிகா சமன் குமார எனும் 28 வய­தான, இரா­ணுவ வீரர் ஒரு­வரின் மனை­விக்கே இந்த தண்­டனை தீர்ப்பு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2011 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திக­திக்கும் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் மஹ­வி­லச்­சிய பகு­தியில் வைத்து பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் குறித்த பாட­சாலை சிறு­வனை கடு­மை­யாக பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­தமை உள்­ளிட்ட மூன்று குற்­றச்­சாட்­டுக்கள் சட்ட மா அதி­ப­ரினால் குறித்த பெண் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

குறித்த பெண்ணின் கணவன் இரா­ணுவ வீரர் என்ற ரீதியில் மாதத்தில் ஒரு நாளே வீட்­டுக்கு வரும் நிலையில் ஏனைய நாட்­களில் குறித்த பெண் குறித்த மாண­வனின் வீட்­டுக்கு சென்றே இரவில் உறக்கம் கொண்­டுள்ளார். இந் நிலையில் சில நாட்­களில் அவர் குறித்த மாண­வனை அவ­ரது வீட்­டுக்கு அழைத்து வந்தும் இரவில் தங்­கி­யுள்ளார். இதன் போதே அவர்  மாண­வனை அந்த பெண் பாலியல் ரீதியில் பலாத்­காரம் செய்­துள்­ள­தாக வழக்கு விசா­ர­ணையின் போது சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. 

எனினும் பொலி­ஸா­ருக்கும் நீதி­மன்­றுக்கும் குறித்த பெண் வழங்­கிய சாட்­சி­யத்தில் குறித்த சிறு­வனே தனி­மையில் இருந்த தனக்கு பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பாலியல் தொல்லை கொடுத்­த­தாக தெரி­வித்­துள்ளார்.

இந் நிலையில், குறித்த பெண்­ணுக்கு எதி­ரான மூன்று குற்­றச்­சாட்­டுக்­களும் சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக்­கப்­ப­டு­வ­தாக அறி­வித்த நீதி­மன்றம் அப்­பெண்­ணுக்கு தண்­ட­னையை நேற்று அறி­வித்­தது.

இதன் போது மூன்று குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கும் எதி­ராக தனித்­த­னி­யாக மும்­மூன்று வரு­டங்கள் சிறைத் தண்­டனை அளிக்­கப்பட்ட போதும், குற்­ற­வா­ளி­யான பெண் கர்ப்­ப­முற்­றி­ருப்­பதை மையப்­ப­டுத்தி, தண்­ட­னையை ஒரே தட­வையில் மூன்று வரு­டங்­களில் அனு­ப­விக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. இத­னை­விட ஒவ்­வொரு குற்­றச்­சாட்டு தொடர்­பிலும் 500 ரூபா தண்டப்பணம் விதித்த நீதிவான் அதனைசெலுத்த தவறின் ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பிலும் தலா ஒரு மாத இலகு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08