தனியார் கல்லூரிகள் அனைத்தும் கொழும்பு பங்குச் சந்தையின் கீழ் பதிவு செய்யப்படும்

Published By: Priyatharshan

16 May, 2017 | 09:46 AM
image

இலங்கையில் பட்டப்படிப்பினை வழங்கும் எல்லா நிறுவனங்களையும்  கொழும்பு பங்குச் சந்தையின் நிறுவனங்களாக பதிவு செய்து நிர்வாக சபையின் செயற்திட்டத்தின் கீழ் செயற்படுத்துவதன் ஊடாக அவற்றை மக்கள் உரித்துடைய நிறுவனங்களாக மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேநேரம் தனியார் வைத்திய கல்லூரிகளில்  கற்கும் மாணவர்கள்  50 ஆயிரம் ரூபாவினை செலுத்தி அரச வைத்தியசாலைகளில் மருத்துவ பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மின்வலு மற்றும் மீள்புதுப்பிக்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.

தனியார் கல்லூரிகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முக்கிய தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது இதன்போதே   அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்>  

அதற்கமைவாக மருத்துவ கல்வியை உள்நாட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் அல்லது அரச பல்கலைக்கழகம் ஒன்றில் தொடர்வதற்கான நிபந்தனைகள் சட்டமூலமாக்கப்பட்டுள்ளது. மேற்படி தனியார் பட்டப்படிப்பை வழங்கும் நிறுவனங்களின் கல்வி தரம் மற்றும் நிர்வாகம் உள்ளிட்டவற்றை முறைகான நெறிப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் அனைத்தையும் கொழும்பு பங்குச் சந்தையின் நிறுவனங்களாக பதிவு செய்து நிர்வாக சபையின் செயற்திட்டத்தின் கீழ் செயற்படுத்துவதன் ஊடாக அவற்றை மக்கள் உரித்துடைய நிறுவனங்களாக மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்.

தனியார் கற்கை நிறுவனங்களில் மருத்துவ கற்கையை தொடரும் மாணவர்கள் இலங்கை மருத்துவச் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நடத்தப்படுகின்ற பரீட்டைசைக்கு தோற்றி சித்தியெத்தினால் மாத்திரமே மேலதிகள மருத்து கல்வித்துரையின் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சைட்டம் தனியார் கற்கை நிறுவனம் சர்ச்சைக்கு உள்ளானதால் அது அந்த நிறுவனத்தின் மீது மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கை முற்றுபெரும் வரையில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நவீன வசதி வாய்ப்புக்கள் மிக்கதான நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையினை அரச உடைமையாக இலவச சிகிச்சை வழங்கு வைத்தியசாலையாக மாற்றியமைத்து அரச பல்கலைகழங்களக மாணவர்களுக்கும் மருத்துவ பயிற்சிகளை வழங்கவுள்ளோம்.

அரச பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்கப்பெறாதா உயரிய பெறுபேருகளை பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு தரமான கல்வியை பெற்றுக்கொள்வதற்கான தனியார் பல்கலைக்கழக கட்டமைப்பினை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்நாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமை பரிசில்களை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளோம். அத்துடன் அரச பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் தொகையினையும் அதிகரிப்புச் செய்து அவர்களுக்கான பல்கலைக்கழக வசதிகளையும் மேம்படுத்திக் கொடுத்த தீர்மானித்துள்ளோம் என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்த்திப்பில் இடம்பெற்ற கேள்விகளும் பதில்களும் வருமாறு,

கேள்வி. சைட்டம் விவகாரம் குறித்து அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் இடம்பெரும் வரையில் அரசாங்கத்தின் கண்கள் திறக்காமல் இருந்ததன் நோக்கம் என்ன?

பதில் : அந்த பிரச்சினைகளுக்கு அர்த்தமுல்ல தீர்வுகளை நாம் தற்போது அறிவித்துள்ளோம். இதனை முன்பே செய்திருத்தாலும் சிறந்ததுதானட இருக்கினும் காலம் தாழ்த்தியேனும் செய்ய கிடைத்தது மகிழ்ச்சியளிக்கின்றது.

கேள்வி: இந்த தீர்மானங்கள் குறித்து சைட்டம் மருத்துவ கல்லூரியின் நிலைப்பாடு எவ்வாறாக அமைந்துள்ளது.

பதில்: நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை முழுமையாக கையளிக்க அவர்கள் தீர்மானித்துள்ளார்கள். இதனால் மக்கள் சேவைகளை அதிகரிக்க முடியும்.

கேள்வி. சைட்டம் தனியார் நிறுவனத்தின் நிர்வாகம் அந்த வைத்தியசாலையை அரசாங்கத்திற்கு வழங்க அரசாங்கம் அவர்களுக்கு இலவசமாக நோயாளிகளை வழங்குகின்றாதா?

பதில்: இல்லை அவ்வாறில்லை இதனால் மக்களுக்கு வழங்கும் அரச சேவையினை விஸ்தரிக்கு முடியும்.

கேள்வி. சைட்டம் மாணவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் பயிற்சியளிப்பதில் நியாயம் உள்ளதா?

பதில். நீதி மன்ற உத்தரவின் பிரகாரம் 50 ஆயிரம் ரூபாவினை செலுத்தினால் மாத்திரமே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் அரச வைத்தியசாலைகளில் பயிற்சியினை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கேள்வி. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அனுராதபுரத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்ளில் மருத்துவ கல்வியை கற்பிப்பதற்காக பேராசியிரர்கள் இல்லாத போது புதிய பீடங்களை நிறுதி அதற்கு பேராசிரியர்களை எங்கிருந்து தேடுவது?

பதில். மேற்படி பிரதேசங்கள் தூரம் என்ற காரணத்தினாலேயே பேராசியிரியர்கள் அங்கு சென்று கற்பிக்க மறுக்கின்றார்கள். அவர்களை வட்புறுத்தலின் பேரில் அனுப்பினாலும் அது நிரந்தர தீர்வான அமையாது. ஆகவே கொழும்பை அண்டிய பகுதிகளில் பல்கலைக்கழங்களின் புதிய பீடங்களை அமைக்கின்ற போது பேராசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08