மோடி உரை­யினால் இலங்­கையின் பாது­காப்­புக்கு பெரும் அச்­சு­றுத்தல்

Published By: Robert

16 May, 2017 | 09:39 AM
image

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை வரு­கையின் போது அவர் ஆற்­றிய உரை­யினால் இலங்­கையின் சுயா­தீனத் தன்­மைக்கு பெரும் அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

மலை­ய­கத்தில் 10 ஆயிரம் வீடுகள் அமைப்­பது குறித்து பேசிய போது அவர் இந்­திய பிர­த­மரா அல்­லது இலங்கை பிர­த­மரா என்ற கேள்­வியே எழுந்­தது. அதனால் இலங்­கையை 

இந்­தி­யாவின் 30 ஆவது பிராந்­தி­ய­மாக்­கு­வ­தற்­கான முனைப்­புக்­களே தெரிந்­தன என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

தூய்­மை­யான நாளைக்­கான அமைப்பின் அலு­வ­ல­கத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும், தெரி­விக்­கையில்,

மோடியின்  வருகை வர­லாற்று ரீதி­யி­லான  பாரம்­ப­ரிய உறவை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தாக மாத்­தி­ரமே அமையும் என்று அர­சாங்கம் கூறி­யது. ஆனால் அவரின் வரு­கையின் பின்­பான செயற்­பா­டுகள் வேறு­பட்ட கருத்­துக்­க­ளையே தோற்­று­விக்­கின்­றது.

அவர் சர்­வ­தேச வெசாக் தினத்தின் விசேட விருந்­தினர் என்றால் அவரின்  கருத்­துக்கள் அது­பற்­றி­ய­தா­கவே அமைந்­தி­ருக்க வேண்டும். ஆனால் அவரின் பேச்சு இலங்கை – இந்­திய உறவு பற்­றி­ய­தா­கவே அமைந்­தி­ருந்­தது. 

அவரின் பேச்சு இலங்கை மற்றும் இந்­தி­யா­வுகிடை­யி­லான முத்­த­ரப்பு சந்­திப்பு போன்றே அமைந்­தது. அவரின் கருத்து முழு­வதும் அர­சியல் சார்ந்த கார­ணி­க­ளையே வெளிப்­ப­டுத்­தி­யது. இரு­நா­டு­க­ளி­னதும் எல்­லை­களில் தொழில்­நுட்பம் ஊற்­றெ­டுக்க வேண்டும் என்­கிறார். அதனூடாக எட்கா ஒப்­பந்­தத்­தினை உட­ன­டி­யாக கைச்சாத்­திட வேண்டும் என்­ப­தையே மறை­மு­க­மாக கூறு­கின்றார்.

காரணம் எட்கா கைச்சாத்­தி­டப்­ப­டாத கார­ணத்­தி­னா­லேயே தற்­போ­து­வ­ரையில் இலங்கை – இந்­திய எல்­லையில் வியா­பாரச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முடி­யாமல் உள்­ளது. அதே­நேரம் இலங்­கை­யி­னதும் இந்­தி­யா­வி­னதும் சமூ­கங்­களின் பாது­காப்­புக்­களை வேறு­ப­டுத்தி பார்க்க முடி­யாது என கூறினார். இதனால் இலங்கை நினைத்தாற் போல் நடந்­து­கொள்ள முடி­யாது. பாது­காப்பு விவ­கா­ரத்தில் எம்மைக் கேட்­காமல் காய் நகர்த்த முடி­யாது என்­ப­தையே கூறு­கின்றார்.

இது இலங்­கையின் சுயா­தீன தன்­மைக்கு விடுக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்தல். மேலும் அடித்­தள கட்­ட­மைப்­புக்­களில் ஒரு­ங்கிை­ணப்புச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்போம் என்றும் கூறினார். ஒருங்­கி­ணைப்புச் செயற்­பாடு என்­பது ஹனுமான் பாலத்தை அமைப்போம் என்­ப­தையே சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டிக்­கோயா சென்ற போது பேசிய விடயம் குறித்து ஆழ­மாக சிந்­திக்க வேண்டும். குறிப்­பாக இந்­திய அம்­புலன்ஸ் சேவை­யினை நாடு முழு­வதும் விஸ்­த­ரிப்புச் செய்வேன் என்றும் மலை­ய­கத்தில் 10 ஆயிரம் வீடு­ களை அமைத்­துக்­கொ­டுப்பேன் என்றும் கூறி­யி­ருந்தார்.

இலங்­கையில் அவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க அவ­ருக்கு  என்ன அதி­காரம் உள்­ளது? அவர் இலங்­கையின் பிர­த­மரும் அல்­லாத போது அவர் அவ்­வாறு கூறு­வது இலங்­கையை இந்­தி­யாவின் 30 ஆவது பிராந்­தி­ய­மாக இணைத்­துக்­கொண் டார் என்­பது போலவே இருந்­தது.

ஜனா­தி­ப­தியை இலங்கை என்ற பிராந்­தி­யத்தின் ஆளு­ன­ரா­கவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அதன் முதலமைச்சராகவும் எண்ணிக்கொண்டுதான் இந்திய பிரதமர் உரையாற்றினார் என்பது தெளிவாகின்றது.

மேலும் இந்தியா இலங்கையை தனது காலனித்துவத்தின் கீழ் கொண்டுவர முயற்சிக்கின்றது என அந்நாட்டு பிரதம ரின் இலங்கை விஜயத்தின் போது வெளிப்படையானது. கவலையாக இருப்பினும் இந்த விடயத்தினை  குறிப்பிட் டாக வேண்டிய தேவை உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58