(ஆர்.யசி)

நினைவேந்தல் நிகழ்வுகள் எனற பெயரில் புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிடும்  வகையில் வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இராணுவத்தை குற்றம் சுமத்தி மக்களை தூண்டிவிடும்  நாடகத்தை இனியும் நடத்தினால் தக்க பாடம் கற்பித்துக்கொடுக்க வேண்டிய வரும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். இராணுவத்தை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரநாயக பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.