வவுனியா - புதூர் செல்லும் வீதியிலுள்ள ரயில் கடவையில் இன்று (15) பிற்பகல் ரயிலுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கொழும்பிலிருந்து இன்று பிற்பகல் 1.35 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, புளியங்குளம் புதூர்  ஆலயப்பகுதியிலிருந்து பிரதான கண்டி வீதிக்கு மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி ரவீந்திரன் கீர்த்தீபன்  (21), மற்றும் உதவியாளரான ஜெகநாதன் ரவீதரன்  (20) என்ற புதூர் மற்றும் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.