கிளிநொச்சி மத்திய மாகவித்தியாலயதிற்கு முன்னால் இன்று காலை கயஸ் ரக வேன் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி சிறு காயங்களுக்குள்ளான நிலையில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி திருநகர் பகுதியில் இருந்து ஏ 9 வீதி ஊடாக இரணைமடு நோக்கி  சென்றுகொண்டிருந்த போது வீதியை கடக்க முயன்ற நாயை விலத்திச்செல்ல முற்பட்டவேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதிலையே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் வேன் பெரும் சேதங்களுக்கு உள்ளானதுடன் விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.