இலங்கையில் இயங்கும் முன்னணி சீன உணவகமான சைனீஸ் ட்ராகன் கஃபே பிரைவட் லிமிட்டெட், தனது 8 ஆவது கிளையை இல. 242 , 7 ஆவது மைல் கல், நுகேகொடை எனும் முகவரியில் திறந்து வைத்துள்ளது. 

போதியளவு இடவசதி படைத்த இந்த புதிய கிளை சிறந்த உள்ளக இடவசதிகளையும் பாரம்பரிய மற்றும் புதிய சீன உணவு வகைகளையும் வழங்குவதுடன் மறக்க முடியாத அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் முன்வந்துள்ளது.

சைனீஸ் ட்ராகன் கஃபேயின் நோக்கம்,“நாம் இயங்கும் பகுதியில் அதிகளவு விரும்பப்படும் உணவகமாகத்திகழ்வது” என்பதாகும். 1942 ஆம் ஆண்டு முதல் 75 ஆண்டுகளாக இயங்கும் பம்பலப்பிட்டிய கிளை, பழமையான சீன உணவகங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. சைனீஸ் ட்ராகன் கஃபே தனது இரண்டாவது கிளையை 2007 இல் இரத்மலானையில் திறந்திருந்தது. பின்னர் இந்த கிளையை 2015 இல் காலி வீதியில் மீளத்திறந்திருந்தது. ராஜகிரியவிலுள்ள மூன்றாவது கிளை 2010 லும் நான்காவது கிளை டச் வைத்தியசாலையின் பின்புறத்தே ஏப்ரல் 2013 லும் 2012 ஒக்டோபரில் ஹெந்தல பகுதியில் தனது தலைமையகத்தையும் திறந்திருந்தது. ஐந்தாவது கிளையை நீர்கொழும்பு வீதி, வத்தளையில் 2014 ஜுலை மாதத்தில் திறந்திருந்ததுடன், ஆறாம் கிளை 2016 ஜுலை மாதத்தில் பெலவத்தையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. நாவலயில் 2016 ஒக்டோபர் மாதம் நிறுவனத்தின் 7 ஆம் கிளை திறக்கப்பட்டிருந்தது. 

உணவகத்திலிருந்து அருந்துதல் (dine in), வெளியே கொண்டு செல்லல் (Takeaway), வெளியக கேட்டரிங் அல்லது வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் (Delivery customers) போன்ற சகல முறைகளிலும் சைனீஸ் ட்ராகன் கஃபே மூலமாக வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவை வழங்கப்படுகிறது.

நுகேகொடை கிளையுடன் தற்போது சைனீஸ் ட்ராகன் கஃபே தற்போது தனது வலையமைப்பின் கிளைகளை 8 ஆக உயர்த்தியுள்ளது. சைனீஸ் ட்ராகன் கஃபே, வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்கிறது. சமூக ஊடகங்கள், மின்னஞ்சல், அழைப்புகள் அல்லது கருத்துப்படிவங்கள் ஆகியவற்றினூடாக கருத்துக்களையும் விமர்சனங்களையும் வழங்க முடியும். வாடிக்கையாளர்களுடன் சிறந்த தொடர்புகளை பேணும் என்பதை சைனீஸ் ட்ராகன் கஃபே உறுதி செய்யும். கையடக்க தொலைபேசிகள் அல்லது www.chinesedragoncafe.com எனும் இணையத்தளத்தினூடாக வாடிக்கையாளர்களுக்கு உணவை ஓடர் செய்து கொள்ள முடியும். 

இவை ஒன்லைன் மூலமான கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளும் திறன் கொண்டவை. விநியோகத்தின் போது பணக் கொடுப்பனவையும் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம். 155,000 க்கும் அதிகமான ரசிகர்களை தனது facebook பக்கத்தில் சைனீஸ் ட்ராகன் கஃபே கொண்டுள்ளது. 

இந்த முறைகளினூடாக வாடிக்கையாளர்களுடன் சிறந்த வகையில் தொடர்பாடல்களை பேணி வருவதுடன் அவர்களின் எதிர்பார்ப்புகளின் பிரகாரம் சேவை மட்டங்களையும் உயர்த்தியுள்ளது. google street view ஊடாக தனது கிளைகள் சிலவற்றில் virtual tour களையும் கொண்டுள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு தமது நினைவிலிருக்கும் உணவு வேளையை அருந்துவதற்கு முன்னதாக உணவகத்தின் உட்பகுதியை பார்வையிட முடியும். சைனீஸ் ட்ராகன் கஃபே பிரைவட் லிமிட்டெட் முகாமைத்துவ பணிப்பாளர் நைஷாத் உதேஷி கருத்துத் தெரிவிக்கையில்,

 “இந்த ஆண்டின் முற்பகுதி முதல் நாவல கிளை வெற்றிகரமாக இயங்கி வருவதைத் தொடர்ந்து நுகேகொடை கிளை தெரிவு செய்யப்பட்டிருந்தது. வார இறுதி நாட்களில் நாவல மற்றும் பெலவத்த கிளைகள் முழுமையாக நிரம்பியிருக்கும். எனவே, எமது வாடிக்கையாளர்களுக்கு கால தாமதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த கிளையை ஆரம்பித்துள்ளோம். 

இப்பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் எமக்கு சமூக ஊடக வலைத்தளங்கள் ஊடாக கால தாமதம் குறித்து அறிவித்திருந்தனர். ஹைலெவல் வீதியைச் சேர்ந்த பெருமளவான அலுவலகங்களுக்கு சேவைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த புதிய கிளை அமைந்திருக்கும் என்பதுடன், நுகேகொடை, கிருலப்பனை, விஜேராம, மஹரகம மற்றும் பெப்பிலியான போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்” என்றார்.

சைனீஸ் ட்ராகன் கஃபேயின் மற்றுமொரு இலக்கானது, சீன உணவு வகைகளை சகாயமான விலையில், “நினைவிருக்கும் உணவு வேளை” யாக வழங்குவது அமைந்துள்ளது. தெரிவு செய்து கொள்ளக்கூடிய ட்ராகன் பக்கட் மற்றும் ட்ராகன் சிற்றுண்டிகள் ஆகியவற்றை ரூயஅp;. 50 இலிருந்து வழங்கி வருகிறது. சைனீஸ் ட்ராகன் கஃபே என்பது, சைவ உணவுத்தெரிவுகள் பலவற்றையும் வழங்கி வருவதுடன், பழ ரசங்களையும் சீனி இன்றி வழங்குகிறது. மேலும், மில்க் ஷேக் வகைகள் மற்றும் ஐஸ் தேநீர் போன்ற பான வகைகளையும் தமது உணவு வேளைகளில் இந்த ஆண்டின் முற்பகுதியில் அறிமுகம் செய்துள்ளது. 

ஒரு மணி நேரத்தினுள் உணவுத் தெரிவுகளை விநியோகிக்கும் உறுதிமொழியை சைனீஸ் ட்ராகன் கஃபே வழங்குகிறது. தரம், அளவு மற்றும் வாடிக்கையாளர் தன்னிறைவை மேம்படுத்துவதற்கான பல்வேறு பயிற்சி மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளை சைனீஸ் ட்ராகன் கஃபே மேற்கொண்டு வருகிறது.

சிலி பேஸ்ட் தற்போது விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கண்ணாடி போத்தல்களில் சுகாதாரமான முறையில் அடைக்கப்பட்டு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் காரமான சுவையை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சைவ சிலி பேஸ்ட் தெரிவையும் சைனீஸ் ட்ராகன் கஃபே கொண்டுள்ளது. சைனீஸ் ட்ராகன் கஃபே கிளைகள், கீல்ஸ் மற்றும் ஆர்பிகோ சுப்பர் மார்க்கெட்களிலிருந்து இந்த சிலி பேஸ்ட் போத்தல்களை கொள்வனவு செய்ய முடியும்.

சைனீஸ் ட்ராகன் கஃபே பணிப்பாளர் சௌரப் உதேஷி தொடர்ந்து தெரிவிக்கையில், 

“உயர் தரம் வாய்ந்த உணவு மற்றும் சேவைகளை எமது ஊழியர்கள் பெற்றுக்கொடுக்கின்றமையையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். இவர்களின் அர்ப்பணிப்பான சேவை காரணமாக, எம்மால் இன்றை நிலைக்கு உயர முடிந்துள்ளது.” என்றார். சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் போட்டியை எதிர்கொண்ட வண்ணம், தனது சேவை மட்டங்கள் மற்றும் உணவின் தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக தேவையான பயிற்சிகள் மற்றும் அபிவிருத்திகள் ஆகியவற்றை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. சூழலுக்கு நட்புறவான சேவைகளை வழங்கும் வகையில், மீள்சுழற்சிக்குட்படுத்தக்கூடிய உணவு பொதி செய்யும் பொலித்தீன்கள் மற்றும் பைகளை அறிமுகம் செய்துள்ளதுடன், கழிகானியல் வசதிகள் இல்லாத கிளைகளில் கழிவு நீரை சுத்திகரிக்கும் வசதிகளையும் அறிமுகம் செய்துள்ளது. தமது ஊழியர்களுக்கு, பயிற்சிகள், தங்குமிட வசதி, தொழில்நிலை விருத்தி, இலவச உணவு வேளைகள், கொடுப்பனவுகள் மற்றும் பல வசதிகளை சைனீஸ் ட்ராகன் கஃபே வழங்கி வருகிறது. இதனூடாக துறையில் காணப்படும் சிறந்த தொழில் வழங்குநராக திகழ்வது என்பது நிறுவனத்தின் நோக்காகும்.

சைனீஸ் ட்ராகன் கஃபேயில் தற்போது 300 க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு புதிய கிளையிலும் 30 புதிய ஊழியர்கள் உள்வாங்கப்படுகின்றனர். “நாம் எப்போதும் பிரகாசமான, தொழில்முயற்சியாண்மையுடன் கூடிய, தொழில்நுட்ப அறிவு படைத்த, வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதை அடிப்படையாகக் கொண்ட நபர்களை இணைத்துக்கொண்டு எமது வியாபாரத்தை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தி வருகிறோம்” என உதேஷி மேலும் குறிப்பிட்டார். உள்நாட்டு சட்ட விதிமுறைகளை முறையாக சைனீஸ் ட்ராகன் கஃபே பின்பற்றி வருவதுடன், விலைகளும் போட்டிகரத்தன்மை வாய்ந்ததாக அமைந்துள்ளன. அரசாங்கத்துக்கு செலுத்தப்பட வேண்டிய சகல வரிகளையும் முறையாக செலுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. உள்நாட்டு நிறுவனமாக சைனீஸ் ட்ராகன் கஃபே நாமத்தை கட்டியெழுப்பும் வகையில் தனது கிளை வலையமைப்பை மேலும் விஸ்தரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது.

இறுதியாக, “சைனீஸ் ட்ராகன் கஃபே என்பது…. நினைவிருக்கும் உணவு வேளையை வழங்குகிறது என்பதை கவனத்தில் வைத்திருங்கள்” என உதேஷி மேலும் தெரிவித்தார்.