தற்போது கருவில் இருக்கும் சிசு, பிரசவ தருணங்களில் எந்தவித சிக்கலுமில்லாமல் வெளியே வருவது அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. இதற்காகவே தற்போது பச்சிளங்குழந்தைகள் நலப்பிரிவு என்ற மருத்துவத்துறை உருவாகி வளர்ச்சியடைந்து வருகிறது. இவர்களிடம் கேட்டால் ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பரிசோதித்து அக்குழந்தை பிரசவ தருணங்களில் ஏதேனும் சிக்கலை தருமா? என்பது குறித்து மகப்பேறு மருத்துவ நிபுணர்களுடன் பச்சிளங்குழந்தைகளுக்கான நல நிபுணர்களும் விவாதிக்கிறார்கள். ஏனெனில் தற்போது அதிகளவிலான குழந்தைகள் hypoxic ischemic encephalopathy என்ற பாதிப்புடன் பிறக்கின்றன.

hypoxic ischemic encephalopathy என்றால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பிராண வாயு குருதி மற்றும் மூளையின் செயல்பாடு இயல்பாக இல்லை என்று பொருள். பொதுவாக வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு தாயின் பனிக்குடத்திலிருந்து தொப்புள் கொடி வழியாகத்தான் பிராண வாயு மற்றும் ஊட்டச்சத்துகள் எல்லாம் கிடைத்து வரும். ஆனால் இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு இது கிடைக்காது அல்லது கிடைக்கவேண்டியஅளவிற்கு கிடைக்காது. இதனால் குழந்தை சுவாசிப்பதில் தடுமாற்றம் ஏற்படும்.இந்நிலையில் குழந்தைக்கு செயற்கை முறையிலான சுவாசக் குழாயைப் பொருத்தி சுவாசத்தை இயல்பாக்கவேண்டும். அத்துடன் இரத்த அழுத்தம், இதயத்துடிப்புஆகியவற்றையும் சமநிலையுடன் இருப்பதை உறுதி செய்யவேண்டும். ஒரு சில குழந்தைகளுக்கு இத்தகைய செயற்கை சுவாசக் குழாய் ஒரு சில நாட்களுக்கோ அல்லது ஒரு சில மாதங்களுக்கோ அவசியப்படலாம். இதனால் குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது. இது போன்ற குழந்தைகளுக்கு பிரசவ காலத்தின் போது கூடுதலானமருத்துவகண்காணிப்பு அவசியம்.

Dr. மணிகண்டன்.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்