பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட விவகாரம் ; அதிருப்தி வெளியிட்டது ஐ.நா.

Published By: Priyatharshan

15 May, 2017 | 10:39 AM
image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு  அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளமைக்கு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் உட்பட சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயகத்திற்கு முழுமையாக விரோதமாகவிருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழித்து அதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தேசிய அரசாங்கம் உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கும் வாக்குறுதி வழங்கியுள்ளது. 

அவ்வாறான வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான வரைபை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மூன்று விடயங்களை பரிந்துரை செய்திருந்தது. ஆவற்றில் ஒரு விடயம் மட்டுமே உள்வாங்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி அச்சட்ட மூலம் அமைச்சரவையில் அங்கீரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவில் இந்த வரைபு தொடர்பில் கலந்துரையாடிய போது, ஒருவர் கைது செய்யப்பட்டவுடன் சட்டத்தரணியை நியமிப்பதற்கான உரித்து, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியாகாது, தடுப்புக்காவலுக்கான வரையறை குறைப்பு ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பாக நாம் பரிந்துரைகளை செய்திருந்தோம்.

இருப்பினும் கால வரையறை விடயம் மட்டும் உள்வாங்கப்பட்ட நிலையில் இந்த  வரைபு பொறிமுறைக்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அந்த பொறிமுறையின் கட்டளைகள் தொடர்பில் எம்மோடு ஆலோசிக்கப்படவில்லை. 

இந்த வரைபு பொறிமுறையானது, சிவில் உரிமைகளை கட்டுப்படுத்துகின்றது.  அரச பாதுகாப்பு அமைப்புகள் மீதான நீதித்துறையின் கட்டுப்பாட்டினை குறைவடையச் செய்கின்றது.  சாத்தியமான  துஸ்பிரயோகத்திற்கும் துன்புறுத்தலுக்கும் வழிவகுப்பதாக  அமைந்திருக்கின்றது. 

அத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர்  நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டாலும் நீதிபதி நிறைவேற்று அங்கத்தில் ஒரு பகுதியாக இருக்கும்படிக்கான அரசியல் யாப்பிற்கு எதிரான நீதித்துறையின் தனித்துவத்தினை இல்லாமல் செய்வதற்கு உதவியாக இருக்கின்றது. 

சித்திரவதையினை தடுப்பதற்கான பாதுகாப்பான  முக்கிய அம்சங்களில் ஒன்றான - வாக்குமூலங்களை இல்லாதொழித்தல் போன்றவை ஆரம்பத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அவை மாற்றப்பட்டுள்ளன. தற்போதுள்ள பொறிமுறையானது சில சந்தர்ப்பங்களில் வாக்குமூலங்களை சேர்த்துக்கொள்வதற்கு ஊக்கமளிப்பதாக இருக்கின்றது. சித்திரவதைகளை தடுப்பதற்கு போதுமானதாக இல்லை.

மேலும் இந்த சட்டமானது பயங்கரவாதத்தோடு எவ்வகையிலும் தொடர்பில்லாதவர்களின் உரிமைகளை பாரியளவில் மீறுவதற்கு அனுமதி அளிக்கின்றது.  அடிப்படை தேவையான சித்திரவதை மற்றும் வலிந்து காணாமற்போக செய்யப்படுதல் போன்றவற்றை தடுக்குமகமாக உள்ளது. 

நாட்டின் பாதுகாப்பையோ அல்லது இலங்கையர்களின் சுதந்திரத்தையோ உறுதி செய்யும் ஒன்றாக காணப்படவில்லை. மக்கள் மீதான கேள்வி கேட்க முடியாத நிறைவேற்று அதிகாரத்திற்க்கு மேலும் வலுச்சேர்ப்பதாக இருக்கின்றது.  பன்முகத்தன்மை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்க்கு தடையாகவுள்ளது. மற்றும் சித்திரவதை துன்புறுத்தல்கள் இடம்பெற வழிசமைப்பதாகவும் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இடம்பெற்ற பயங்கரமான சித்திரவதைகளின் பின்னணியில், எமது மக்களின் உரிமைகளின் பாதுகாப்பானது, வர்த்தக நன்மைகள் என்ற பலிபீடத்தில் பலியிடப்படமுடியாது.

அதுமட்டுமன்றி முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கான வரவிலக்கணமானது, சர்வதேச மட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்பிலான எல்லைகளுக்கு அப்பால் செல்கின்றது. பாரியளவில் தெளிவற்றவையாக உள்ளது. பதில் அற்றவையாகவும் காணப்படுகின்றது.

இந்த விடயங்களை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆவ்வாறான நிலையில் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் வதிவிடப்பிரதிநிதி உனா மெக்கோலி உட்பட ஏனைய சார்வதேச நாடுகளின தூதரங்கள் எம்மிடத்தில் இது தொடர்பாக கலந்துரையாடல்களைச் செய்திருந்தன. 

குறிப்பாக எமது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டமை மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் எமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி மறுதலிக்கப்பட்டமை தொடர்பில் கடுமையான அதிருப்தியை எம்மிடத்தில் வெளிப்படுத்தியிருந்தன. 

அதுமட்டுமன்றி இந்த விடயம் சம்பந்தமாக அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை செய்யவுள்ளதாகவும் அத்தரப்புக்கள் எமக்கு தெரிவித்துள்ளன. ஆகவே நிச்சமயாக அவை அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களை வழங்கும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும்  ஜனநாயகத்திற்கு  முழுமையான எதிர்மறையாகவுள்ள இந்த சட்டத்தினை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22