தூக்க மாத்­தி­ரை­களை தொடர்ந்து எடுப்­பது புற்­று­நோயை ஏற்­ப­டுத்துமா .?

Published By: Robert

14 May, 2017 | 03:11 PM
image

அடுத்­த­வர்­களைப் பார்த்து, அவர்­க­ளுக்கு இணை­யாக அல்­லது அவர்­களைப் பார்க்­கிலும் அதி­க­மாக பணம் சம்­பா­திக்க வேண்­டு­மென்ற ஆவலும், தொடரும் கடன்­ கவ­லை­களும், குடும்ப மற்றும் வேலை­யில்லாப் பிரச்­சி­னை­களும், செய்யும் தொழிலில் தொடரும் தொல்­லை­களும், போட்டா போட்­டி­களும் நமக்குத் தரு­வ­தெல்லாம் மன உளைச்­சலும் அதன் தொடர்ச்­சி­யாக நம்மை வருத்தும் தூக்­க­மின்­மையும் தான். 

“ தூக்­க­மென்­னப்பா தூக்கம்? ஒரு தூக்க மாத்­தி­ரையைப் போட்டா தன்­னாலே வந்து விடப்­போ­கி­றது?" என்று அலட்­சி­யமாய்க் கேட்கும் பேர் வழியா நீங்கள்? அப்­ப­டி­யானால் உங்­க­ளுக்­கான விட­யம்தான் இந்தக் கட்­டுரை! தூக்க மாத்­தி­ரை­களே நாள­டைவில் புற்­று­நோய்க்குக் கார­ண­மாகி நிரந்­த­ர­மான தூக்­கத்தில் உங்­களை ஆழ்த்­தி­வி­டலாம் என்று அதிர வைக்­கி­றது சமீ­பத்தில் வெளி­யான மருத்­துவ ஆய்வு ஒன்று!

Sleeping Disorder அதா­வது தூக்­க­மின்மை என்­பது மருத்­து­வத்­து­றைக்கே சவா­லான மிகப்­பெ­ரிய விடயம். இப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண மேல் நாடு­களில் விசேட வைத்­திய நிபு­ணர்கள் இருக்­கி­றார்கள். ஆனால் நம் நாட்டில் அதனை ஒரு நோயா­கவே பார்ப்­ப­தில்லை. ஏதோ காய்ச்சல் தலை­வ­லிக்­குப்­போல வைத்­தி­யர்­க­ளிடம் கேட்டு மாத்­தி­ரை­களை எழுதி வாங்கிக் கொண்டு வந்து விடு­கிறோம். அதுதான் நாள­டைவில் ஆபத்­தாகி விடு­கி­றது என்­கி­றார்கள் வைத்­திய நிபு­ணர்கள். நிம்­ம­தி­யான தூக்கம் வரு­வ­தற்­காகப் போடும் தூக்­க­மாத்­தி­ரைகள் முதலில் வாய் உலர்தல், தலைச் சுற்றல், வயிற்றுப் போக்கு என்று சின்­னச்­சின்ன பக்க விளை­வு­களைத் தரலாம். இதெல்லாம் இரண்டு அல்­லது மூன்று நாட்­களில் சரி­யாகி விடும். ஆனால் மாத்­தி­ரை­களை அந்த அள­வோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்­ப­டி­யில்­லாமல் இதே­வே­லை­யாக மாதக் கணக்கில் தொடர்ந்து மாத்­தி­ரை­களைப் எடுத்தால் நாளாக நாளாக இரத்த அழுத்தம் குறைந்து மூச்சுத் திணறல் ஏற்­பட்டு, இரு­தயம் பாதிக்­கப்­ப­டு­கிற அள­வுக்கு கொண்­டுபோய் விடலாம். 

இன்­னொரு ஆபத்­தான பாதிப்பு என்­ன­வெனில், நாள­டைவில் அந்த மாத்­தி­ரை­க­ளுக்கு நாமே அடி­மை­யாகி விடு­வ­துதான். ஒரு மாத்­தி­ரையில் ஆரம்­பித்து, பின்னர் இரண்டு நாலு என்று அதி­க­மாகி மருத்­து­வர்­களின் பரிந்­து­ரை­யில்­லா­ம­லேயே நினைத்த நேரத்தில் போட­வைக்கும். இதே­போ­லத்தான் போதை மருந்துப் பாவ­னையும். மன­திலும் உட­லிலும் சோர்வு மற்றும் இய­லாமை என்று தெரிந்த மாத்­தி­ரத்தில் பாவிக்­கத்­தூண்டும்.  தூக்­க­மாத்­தி­ரை­களும் ஒரு போதைதான். நாள­டைவில் அது இல்­லாமல் வாழவே முடி­யாது என்ற நிலைக்கு அது நம்மைக் கொண்டு வந்து விடும். இப்­படித் தொடர்ந்து மாத்­திரை பாவிப்­ப­வர்­க­ளுக்­குத்தான் புற்று நோய் எச்­ச­ரிக்­கையும். தூக்க மாத்­தி­ரை­களை தொடர்ச்­சி­யா­கவும், அள­வுக்­க­தி­க­மா­கவும் பாவிக்­கிற சில­ரிடம் நடத்­திய ஆய்வில் முதற்­கட்­ட­மாக இப்­படிக் கூறி­யி­ருந்­தாலும், அதனை உறு­திப்­ப­டுத்தும் முடி­வுகள் இன்னும்  வெளி­யா­க­வில்லை. 

ஆனால் இன்­றைய இளைஞர், யுவ­தி­க­ளுக்கு இந்த எச்­ச­ரிக்கை நல்ல பல­னைத்­த­ரலாம். ஏனென்றால் முந்­திய நாட்­களில் வய­தா­ன­வர்­கள்தான் தூக்கம் வராமல் தவித்து, அதற்­காக மாத்­தி­ரையின் துணையை நாடி­னார்கள். ஆனால் இப்­பொ­ழு­தெல்லாம் முப்­பது வய­திற்கு கீழ்ப்­பட்ட இளைஞர், யுவ­தி­க­ளுமே காதல் மற்றும் குடும்பப் பிரச்­சி­னை­களில் சிக்கித் தவித்து நிம்­ம­தி­யையும் தூக்­கத்­தையும் தொலைத்­து­விட்டு, தூக்க மாத்­தி­ரை­களின் துணையை அனு­தி­னமும் நாடு­கின்­றனர் என்று அதிர்ச்­சியைக் காட்­டு­கி­றார்கள் மருத்­து­வர்கள். 

தூக்கம் வர­வில்­லை­யென்ற சாதா­ர­ண­மான பிரச்­சி­னை­யா­னது அதற்­காகப் பாவிக்­கப்­படும் மருந்து மாத்­தி­ரை­களின் தன்­மைக்­கேற்ப நாள­டைவில் புற்­று­நோயைக் கொண்­டு­வந்து விடுமா என்று மனோ­வியல் மருத்­துவ நிபுணர் ஒரு­வ­ரிடம் உசா­வினோம்…

மருந்­துகள், மாத்­தி­ரைகள் எல்­லா­வற்­றி­லுமே சிறிய அள­வுக்­கா­வது பக்க விளை­வுகள் இருக்­கத்தான் செய்யும். இரு­ம­லுக்குக் குடிக்­கிற மருந்­தி­லேயே (Syrup) நித்­தி­ரையை வர­வ­ழைக்­கிற மருந்து இருக்­கத்­தானே செய்­கி­றது? தூக்­க­மாத்­தி­ரை­களைப் பொறுத்­த­வரை டாக்­டர்­களின் சிபா­ரிசு இல்­லாமல் மருந்­த­கங்­களின் வாங்­கி­விட முடி­யாது. ஒரே நேரத்தில் அதி­க­மான தூக்­க­மாத்­தி­ரை­களை உட்­கொண்டால் அது உடம்பில் பாதிப்பை நிச்­சயம் ஏற்­ப­டுத்­து­கி­றது. ஆனால் அது­கூட உயிரைப் பறிக்­கிற அள­வுக்கு வீரி­யமாய்ச் செயற்­ப­டா­தென்­பது எனது கருத்து. தூக்க மாத்­தி­ரை­களின் பாவ­னையால் புற்­றுநோய் வரு­மென்ற தகவல் இன்னும் உறு­தி­செய்­யப்­ப­ட­வில்லை. அதனால் யாரும் பீதி­ய­டை­யத்­தே­வை­யில்லை. 

அதே­ச­மயம், மாத்­தி­ரை­களைப் பாவிப்­பதால் பக்க விளை­வுகள் ஏற்­ப­டு­மென்று பயப்­ப­டு­கி­ற­வர்கள், உடம்­புக்குத் தேவை­யான உறக்கம் வரா­ததால் ஏற்­ப­டு­கிற விளை­வு­க­ளையும் எண்­ணிப்­பார்க்க வேண்டும். சரி­யான தூக்கம் இல்­லா­விடில் மன அழுத்­தத்­துடன் கல்­லீரல், சிறு­நீ­ரகம் கூட பாதிக்­கப்­ப­டலாம். மாத்­தி­ரை­க­ளையும் தாண்டி சில சிகிச்­சைகள் மற்றும் உடற்­ப­யிற்­சிகள் மூல­மா­கவும் தூக்­க­மில்­லாத பிரச்­சி­னை­யி­லி­ருந்து விடு­பட முடியும் என்­கிறார் அந்த வைத்­திய நிபுணர். 

அதே­வேளை தூக்க மாத்­தி­ரை­களே இல்­லாமல் நல்ல தூக்கம் வர சில வழி முறை­க­ளையும் பரிந்­து­ரைக்­கின்றார் மேற்­படி வைத்­திய நிபுணர். அவை­யா­வன: காலை வேளை­களில் குறைந்­தது 15 நிமி­ட­மா­வது திறந்த வெளி­களில் நடைப்­ப­யிற்சி செய்ய வேண்டும். தேநீர், கோப்பி போன்ற சூடான உற்­சா­க­மூட்டும் பானங்­களை மாலை ஆறு­ம­ணிக்குப் பிறகு அருந்­தக்­கூ­டாது. இரவில் படுக்­கப்­போ­வ­தற்கு முன்னால் ஒரு முறை குளித்தோ, உடம்பைக் கழு­வியோ குளு­கு­ளுப்­பா­கவும் சொகு­சா­கவும் வைத்துக் கொள்ள வேண்டும். தூங்­கு­வ­தற்கு இரு­மணி நேரத்­திற்கு முன் இரவு உணவை அருந்த வேண்டும். தூங்குவதற்கு முன் பழமும் சாப்பிட்டு, சூடான பாலும் அருந்தலாம். பழங்களில் மாம்பழத்திற்கு ஒருவரைத் தூக்கத்திலாழ்த்தும் சக்தி இயற்கையாகவே உண்டு. தூங்கும் அறையில் வெளிச்சம் குறைவாகவோ அல்லது வெளிச்சமே இல்லாமலோ பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக, மனிதனை சிறிய அளவிலான மயக்க நிலைக்கு கொண்டு செல்வதற்கான மருந்துகளே தூக்க மாத்திரைகளில் இருக்கும். நரம்பு மண்டலத்தில் இலேசான பாதிப்பை ஏற்படுத்தவல்ல அந்த மருந்துகள் புற்றுநோய்க்கு பாதை அமைத்துக் கொடுப்பதை மருத்துவ உலகம் அனுமதிக்காது என்று நம்புவோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36