ஐ.பி.எல். தொடரில் இன்றைய தினம் குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்று அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாகியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணியின் ஆரம்ப ஜோடியான ஸ்மித் மற்றும் இசான் கிசன் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 111 ஓட்டங்களை குவித்தனர்.

எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க குஜராத் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 154 ஓட்டஙக்ளை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

குஜராத் அணி சார்பில் இசான் கிசான் 61 ஓட்டங்களையும், ஸ்மித் 54 ஓட்டங்களையும் குவித்தனர்.

பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

ஹைதராபாத் அணி சார்பில் வோர்னர் 69 ஓட்டங்களையும், விஜய் சங்கர் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஹைதராபாத் அணியின் மொஹமட் சிராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை புள்ளிப்பட்டியலில் 17 புள்ளிகளை பெற்று ஹைதராபாத் அணி 2வது இடத்தை பிடித்துள்ளதுடன், தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.