மஹரகம - மெதவல வீதியிலுள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடத்துக்கு சென்றுள்ள தெஹிவளை மற்றும் கல்கிசை பகுதிகளிலுள்ள தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீ பரவலின் காரணமாக ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.