விழிப்புலனற்ற கிரிக்கட் வீரர்களுக்காக முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இருபதுக்கு இருபது ஆசிய கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்கு விழிப்புலனற்றவர்களுக்கான இலங்கையின் தேசிய கிரிக்கட் அணியும் இந்தியாவின் விழிப்புலனற்றவர்களுக்கான கிரிக்கட் சங்கத்தால் அழைக்கப்பட்டுள்ளது.

இச்சுற்றுப்போட்டியானது 2016 ஜனவரி 17 முதல் 24 வரை இந்தியாவின் கொச்சி நகரில் இடம்பெறவுள்ளது. 

இலங்கையின் தேசிய அணி இந்த நாட்டில் கிரிக்கட் அபிமானிகளின் பேராதரவை வென்றெடுத்துள்ளதுடன், கடந்த இரண்டு முதல் மூன்று வரையான உலகக் கிண்ணச் சுற்றுப்போட்டிகளில் மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி, நாட்டிற்கு பெருமை தேடித் தந்து, பெரும் புகழையும், பாராட்டுக்களையும் சம்பாதித்துள்ளது. 

தம்முடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரதும் அபிலாi~களை மேம்படுத்த எப்போதும் ஆதரவளித்துவரும் Regus Sri Lanka, இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்துள்ளதுடன், விழிப்புலனற்றவர்களுக்கான இலங்கை கிரிக்கட் சங்கத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டி, தேசிய அணியை ஊக்குவிக்க முன்வந்துள்ளது. 

விழிப்புலனற்றவர்களுக்கான கிரிக்கட் அணிக்கு ஆதரவளிக்கும் இந்த முன்னெடுப்பு தொடர்பில் Regus Sri Lanka இன் இலங்கைக்கான வதிவிட முகாமையாளரான கலாநிதி நிர்மல் டி சில்வா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் 

“விழிப்புலனற்றவர்களுக்கான இலங்கை கிரிக்கட் சங்கத்தின் தலைவரான திரு. நோபேட் சில்வா அவர்கள் மூலமாக, அணியினர் எம்மை அணுகிய போது இந்த முன்னெடுப்பு தொடர்பாக நாம் கருத்தில் கொண்டதுடன், கிரிக்கட் அணி இந்தியாவிற்குச் சென்று அங்கு சிறப்பாக விளையாடி இலங்கைக்கு பெருமை சேர்ப்பிப்பதற்கு வாய்ப்பளிக்க தேவையான ஆதரவை வழங்குவதற்கு நாம் தீர்மானித்தோம்.

வியாபார முயற்சிகளை ஆரம்பிக்கும் நிறுவனங்கள் அல்லது பாரிய பல்தேசிய நிறுவனங்கள் என எதுவாக இருப்பினும், எமது வாடிக்கையாளர்கள் மிகவும் வெற்றிகரமான பெறுபேறுகளை ஈட்டுவதற்கு உதவுவதில் Regus எப்போதும் கவனம் செலுத்தி வந்துள்ளது. சமூகத்தைப் பொறுத்த வரையில் இதே அணுகுமுறையே பின்பற்றப்படுகின்றது.

கிரிக்கட் விளையாட்டின் மீது இலங்கையில் ஏராளமானோர் மிகுந்த ஆவல் கொண்டுள்ளதுடன், இந்தச் சுற்றுப்போட்டிக்கு Regus மற்றும் ஒட்டுமொத்த தேசமும் அணிக்கு ஆதரவளிப்பதை வலியுறுத்தும் வகையில் தேசிய அணியை ஊக்குவிக்க நாம் விரும்பினோம்.”  

கிரிக்கட் சங்கம் Regus Sri Lanka இன் ஆதரவை நாடி அந்நிறுவனத்தை அணுகியமை தொடர்பில் விழிப்புலனற்றவர்களுக்கான இலங்கை கிரிக்கட் சங்கத்தின் தலைவரான நோபேட் சில்வா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“எமக்கு அணுசரணை அளிக்க முன்வந்ததுடன், எமது தாய்நாட்டிற்கு வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்ற எமது பேரவாவிற்கு உதவ Regus Sri Lanka முன்வந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். விழிப்புலனற்றவர்களின் திறன்கள் மற்றும் ஆற்றல்களை மிளிரச் செய்து, எமது அணியைப் பலப்படுத்துவதற்கு Regus தனது உண்மையான ஆர்வத்தையும், ஆவலையும் இதன் மூலமாக வெளிக்காண்பித்துள்ளது.

மேலும் இச்சுற்றுப்போட்டியில் கலந்துகொள்வதற்கு பிரயாணம் செய்வதற்கான விமான பயணச்சீட்டுக்களை வழங்கியுள்ள விளையாட்டு அமைச்சும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதுடன், இதற்காக கௌரவ விளையாட்டு அமைச்சரான தயாசிறி ஜெயசேகரவுக்கு எமது உண்மையான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.”

20 வீரர்களைக் கொண்ட தேசிய அணி இச்சுற்றுப்போட்டியில் கலந்துகொள்வதற்கு மிகுந்த ஆவலுடன் இருந்தாலும், விழிப்புலனற்றவர்களுக்கான கிரிக்கட் சங்கம் இத்தகைய சுற்றுப்போட்டிகளில் அணியை பங்குபெறச் செய்வதற்கு போதிய அளவில் நிதியியல் பலத்தைக் கொண்டிருக்கவில்லை. 

“உலகக் கிண்ணத்தின் வெற்றியாளர்களாக வலம்வருவதற்குத் தேவையான ஆற்றல், அர்ப்பணிப்பு மற்றும் திறமைகளை இலங்கை அணி கொண்டுள்ளதென சுநபரள நம்புகின்றது. ஒரு தேசம் என்ற வகையில் எம்மால் முடியாது என்று எதுவுமே கிடையாது என்பதை வலியுறுத்தி, விழிப்புலனற்றவர்களுக்கான கிரிக்கட் அணியை நாம் ஊக்குவிக்க விரும்பியதுடன், இந்தியாவில் அவர்கள் சிறப்பாக விளையாடி சிங்கக் கொடியை உயரத்தில் பறக்கச் செய்வர் என உறுதியாக நம்புகின்றோம்” என்று கலாநிதி டி சில்வா குறிப்பிட்டார். 

Regus நிறுவனம் தொடர்பான விபரங்கள்

அலுவலக இட வசதிகளை ஏற்பாடு செய்வதில் உலகளாவில் பாரிய நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற Regus, மிகவும் வெற்றிகரமான தொழில் நிறுவனங்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பல மில்லியன் டொலர்கள் வருமானத்தை ஈட்டுகின்ற பாரிய வர்த்தக நிறுவனங்கள் அடங்கலாக ஏராளமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 

                                           

எமது வலையமைப்பின் கீழ் 106 நாடுகளில் 2,600 இடங்களில், உலகில் பிரபலமான அமைவிடங்களில் 43 மில்லியன் சதுர அடி இட வசதியைக் கொண்டுள்ள இந்நிறுவனம், சௌகரியமான, உயர் தரம் கொண்ட, ஒட்டுமொத்த வசதிகளையும் கொண்ட அலுவலக இட வசதிகளை பணியாளர்கள் பணியாற்றுவதற்கு வழங்கி வருவதுடன், குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் இவ்வசதிகளை வழங்கிவருகின்றது. கூகிள், டொஷிபா, கிளக்ஸோஸ்மித்க்ளைன் போன்ற நிறுவனங்கள் Regus இனைத் தேர்ந்தெடுத்துள்ளதுடன், உலகெங்கிலும் தமது வியாபாரத்தை வளர்ச்சி காணச் செய்வதில் வெற்றிகரமாக இயங்குவதற்கு Regus மூலமாக இலகுவான சேவையைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது.  

சௌகரியமே இலகுவான சேவைக்கு இடமளிப்பதுடன், நகர மையங்கள், துணை நகர மாவட்டங்கள், ஷெப்பிங் மையங்கள் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்கள், புகையிரத நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், நெடுஞ்சாலை பேணற்சேவை நிலையங்கள், மற்றும் சமூக நிலையங்கள் என எங்கிலும் தனது 2.1 மில்லியன் உறுப்பினர்களுக்கு Regus உதவி வருகின்றது.

இந்த குழுமத்தின் கீழ் Regus, Regus Express, Signature Group, Open Office, Spaces மற்றும் Kora அடங்கலாக பல்வேறு வர்த்தகநாமங்கள் இடம்பெற்றுள்ளதுடன், பாரம்பரிய அலுவலகங்கள் முதல், கவர்ச்சியான படைப்பாக்கத்திறன் சூழல் வரை அனைத்து வகையான வியாபார நிறுவனங்களினதும் தேவைகளை ஈடு செய்து, படைப்பாக்கத்திறன் சிந்தனை மற்றும் இணைந்த அடிப்படையில் சேவைகளை வழங்கி வருகின்றது.

பெல்ஜியம் பிரஸல்ஸ் நகரில் 1989 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட Regus, லக்ஸம்பேர்க் நகரைத் தளமாகக் கொண்டு இயங்குவதுடன், லண்டன் பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளது.