பகி­ரங்க அர­சி­யலில் ஈடு­படுவதற்கு இதுவரையில் தீர்­மா­னிக்­க­வில்லை. ஆகையால் எனது அமெ­ரிக்க குடி­யு­ரி­மையை இரத்துசெய்துகொள்ளும் அவ­சியம் எனக்­கில்லை என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ச தெரி­வித்­துள்ளார்.

எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக கோத்­த­பாய ராஜ­பக்சஇ தனது அமெ­ரிக்க குடி­யு­ரி­மையை இரத்து செய்ய உள்­ள­தாக இணை­யத்­த­ளங்­களில் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இதற்­காக கோத்­த­பா­ய­வுக்கு நெருக்­க­மான சில வர்த்­த­கர்கள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் புதல்­வி­யான இவங்கா ட்ரம்­புடன் நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­வ­தா­கவுகவும் அவற்றில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தன. 

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளி­யிட்ட போதே முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ச மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வதுஇ

எனது மகன்இ மனை­வியின் தாய்இ சகோ­த­ரர்கள் அமெ­ரிக்­காவில் வசித்து வரு­கின்­றனர். இதனால்இ நான் அடிக்­கடி அமெ­ரிக்­கா­வுக்கு சென்று வர வேண்டும். அதேபோல் பகி­ரங்க அர­சி­ய­லுக்கு வர நான் இன்னும் தீர்­மா­னிக்­க­வில்லை. எனவே எனது அமெ­ரிக்க குடி­யு­ரி­மையை இரத்து செய்து கொள்­வ­தற்­கான தேவை எனக்­கில்லை. 

குடி­யு­ரி­மையை இரத்து செய்து கொள்ள வேண்­டு­மாயின் அமெ­ரிக்க தூத­ர­கத்தில் கோரிக்கை மனுவை சமர்­பித்தால் இரண்டு வாரங்­களில் அதனை இரத்து செய்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.