சீனாவுக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதற்கோ அல்லது தடுத்து நிறுத்துவதற்கோ இலங்கை அரசாங்கத்தின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில்  மேற்படி செய்திகள் தொடர்பில் சீன அரசாங்கம் எந்தவித கருத்துக்களைுயும் வெளியிடாது மௌனம் காத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

தமது நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்குள் தரித்து நிற்பதற்கான அனுமதியை சீன அரசாங்கம் கோரியிருந்ததாகவும் அந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

நிலைமை இவ்வாறு இருக்க இவ்விடயம் தொடர்பில் சீன அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சிடமே பதில் இருப்பதாக அந்நாட்டின் வெ ளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இவ்வாறான நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.