புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை பொலிஸார் கைது செய்தனர்.

பிபிலை - நமிரித்தகெட்டிய பகுதியில் குறித்த நால்வரும் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தமக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், நால்வரையும் கையும் களவுமாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரில் 18 வயது இளைஞனும் 80 வயது முதியவர் ஒருவரும் அடங்குவர்.