'அடிக்கல் நாட்டும் போது அமைச்­ச­ராக இருந்த நான் திறக்கும் போது ஜனா­தி­ப­தி­யாக இருப்பேனென நினைக்­க­வில்லை'

Published By: Priyatharshan

13 May, 2017 | 09:54 AM
image

டிக்­கோயா வைத்­தி­ய­சா­லைக்கு 2011 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்­டி­ய­ போது நான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்தேன். அதை திறந்து வைக்கும் போது நான் ஜனா­தி­ப­தி­யாக இருப்பேன் என்று நான் நினைத்­தி­ருக்­க­வில்லை. அதேபோல், திறப்பு விழாவில் இந்­தியப் பிர­தமர் மோடி கலந்து கொள்வார் என்றும் நான் நினைக்­க­வில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சாலை வளவில் இந்­திய அரசின் நிதி­யு­த­வி­யுடன் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள வைத்­தி­ய­சாலை திறப்பு  விழாவில் கலந்து கொண்ட பின்னர் நோர்வூட் விளை­யாட்டு மைதா­னத்தில் இடம்­பெற்ற பொதுக் கூட்­டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் பேசு­கையில்,

நுவ­ரெ­லி­யாவில் வாழும் மலை­யக மக்­க­ளுக்கும் இலங்கை மக்­க­ளுக்கும் மட்­டு­மல்­லாமல் உலக மக்­க­ளுக்கே இன்று ஒரு முக்­கிய நாளாகும். ஏனெனில் சர்­வ­தேச வெசாக் தினம் இன்று ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டுள்­ளது.பௌத்த மக்­க­ளுக்கும் இந்து மக்­க­ளுக்கும் ஆயிரம் வரு­டங்­க­ளாக இறுக்­க­மான உறவு இருந்து வரு­கின்­றது. அந்த இறுக்­கத்தை மேலும் அதி­க­ரிக்கும் வகையில் இந்­தியப் பிதமர் நரேந்­திர மோடி மலை­யக மக்­களை சந்­திப்­பதில் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.

டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சாலை வளவில் முழு­மை­யாக நவீன வச­தி­க­ளுடன் வைத்­தி­ய­சாலை கட்­ட­டத்தை நிர்­மா­ணித்து கொடுத்து அதை  திறந்து வைக்க வருகைத் தந்­துள்ள இந்­தியப் பிர­த­ம­ருக்கும் இந்­திய அர­சுக்கும் நன்றி கோரு­கின்றேன். 

இந்த கட்­ட­டத்­துக்கு 2011 இல் நான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்த போது அடிக்கல் நாட்­டினேன். அது திறந்து வைக்­கப்­படும் போது நான் ஜனா­தி­ப­தி­யாக இருப்பேன் என்று நினைத்­தி­ருக்­க­வில்லை. இந்த விழாவில் பிர­தமர் மோடி கலந்து கொள்வார் என்றும் நினைத்­தி­ருக்­க­வில்லை. எனவே இந்த சந்­தர்ப்­பத்தை பெரும் பாக்­கி­ய­மாக கரு­து­கிறேன்.

வர­லாற்று ரீதியில் அமைச்சர் மனோ கணேசன் குறிப்­பிட்­டது போல இரா­மா­யண காலத்து தொடர்பு இருந்து வரு­கி­றது. ஆங்­கி­லேயர் ஆட்சிக் காலத்தில் உலக மத்­தியில் மத்­தியில் மிகுந்த மதிப்பு கொண்­டுள்ள மகாத்மா காந்தி இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ளார். இன்றும் அந்த தொடர்பு வலு­வ­டைந்து வரு­கின்­றது.

பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு பல பிரச்­சி­னைகள் உள்­ளன. இந்­திய வம்­சா­வளி மக்கள் பிர­ஜா­வு­ரிமை பெறு­வதில் அர­சியல் ரீதி­யாக பல பிரச்­சி­னைகள் இருந்து வந்­தன. 1964 இல் ஸ்ரீமா – சாஸ்­திரி ஒபந்தம் செய்து கொள்­ளப்­பட்­ட­தன் பின்னர் படிப்­ப­டி­யாக பிர­ஜா­வு­ரிமை பெரும் நிலைமை ஏற்­பட்­டது. இன்று அனை­வருக்கும் பிர­ஜா­வு­ரிமை கிடைத்­துள்­ளது. இன்று நாம் தேசிய ஒற்­று­மையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய நிலையில் உள்ளோம். சிங்­களஇ தமிழ்இ முஸ்லிம் மக்கள் மத்­தியில் ஒற்­று­மையை பலப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தேசிய ஒற்­றுமை ஊடா­கவே இன­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும். அதற்கு அர்ப்­ப­ணிப்­போடு அனை­வரும் செயற்­பட வேண்டும்.

வட பகுதி மக்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. என­வேதான், 25 வரு­டங்­க­ளுக்கு மேலாக பாரிய போராட்­டத்­துக்கு முகங் கொடுக்க நேர்ந்தது.  அதேபோல்இ பெருந்தோட்ட மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. எனவே இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயன்று வருகிறோம். மலையக மக்கள் ஏனைய மக்களுக்கு இணையாக வாழ்வதற்கு செயற்படுவோம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51