இலங்கை மருத்துவ சபை வளாகத்திற்குள் வீசப்பட்ட கைக்குண்டு ஒன்று வெடிக்காத  நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு-10 மருதானை நொரிஸ் கனல் வீதியில் அமைந்துள்ள இலங்கை மருத்துவ சபை வளாகத்திலிருந்தே குறித்த கைக்குண்டை மீட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.