செயற்கை கருத்தரித்தல் செயன்முறை ஒரு சில வார இடைவெளியில் மூலம் கருத்தரித்த பெண் ஒரினச்சேர்க்கை ஜோடியொன்று நான்கு நாட்கள் வித்தியாசத்தில் ஆண் குழந்தைகளை பிரசவித்த சம்பவம் அமெரிக்க நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.

கேட் எலாஸெகயி (41 வயது) மற்றும் எமிலி கெசி (38 வயது) ஆகியோரே தானமாகப் பெற்ற விந்தணுக்கள் மூலம் முறையே எடி மற்றும் ரெயிட் ஆகிய ஆண் குழந்தைகளை இவ்வாறு 4 நாட்கள் இடைவெளியில் பிரசவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவரான ஜூ காங் கூறுகையில், மேற்படி இருவரும் ஒரே சமயத்தில் செயற்கைக் கருத்தரித்தல் சிகிச்சைக்கு உட்படத்தப்பட்டதாகவும் இதன்போது எமிலி அந்த சிகிச்சையின் முதல் சுற்றுலேயே கர்ப்பமடைய கேட் அதற்கு 3 வாரங்கள் கழித்து கர்ப்பமடைந்ததாகவும் தெரிவித்தார்.