சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள..!

Published By: Robert

12 May, 2017 | 10:58 AM
image

கோடை காலம் வந்துவிட்டால் எம்மவர்கள் வெளியிடங்களுக்கு சென்று பணியாற்றுவதற்கு யோசிப்பர். அலுவலகமாக இருந்தால் குளிர்சாதன வசதி இருக்கிறதா? என்று கேட்பர். அத்துடன் இன்றைய கோடையில் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருப்பதாலேயே வணிக வளாகங்களுக்கு பெண்களும், குழந்தைகளும் படையெடுக்கிறார்கள். கோடைவெயிலைச் சமாளிக்க இப்படியெல்லாம் யோசிப்பவர்களில் ஒரு சிலர் ஏன் வெயிலில் வெளியேச் சென்று உலவக்கூடாது என்று கேட்பர்.

அவர்களுக்கு விளக்கம் சொல்வதை விட வெயிலில் வெளியே சென்றால் என்ன நடக்கும் என்பதை சொல்லிவிட்டால் அதை தெரிந்துகொண்டு அவர்களே தீர்மானிப்பர்.

எம்மில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், மது அருந்துபவர்கள், விளையாட்டு வீரர்கள், நேரடியாக சூரியஒளியில் பணியாற்றுபவர்கள், இதய பாதிப்பிற்காக மருந்து மாத்திரை மற்றும் இரத்த அழுத்தம் குறித்த மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்றுபவர்கள் ஆகியோர்கள் எல்லாம் இந்த கோடைக் காலத்தை தங்களது வெளியுலகத்தை மறந்து விட்டுவீட்டிலேயே இருப்பது தான் நலம்.

ஏனெனில் இவர்கள் வெளியே வந்தால் கடுமையான சூரிய ஓளித்தாக்குதலால் ஏற்படக்கூடிய மயக்கம் அதாவது சன் ஸ்ட்ரோக் அதாது ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் கடுமையான பாதிப்புஏற்படக்கூடும்.  கடுமையான வெப்பம் எம்மீது நேரடியாக படும் போது மூளையில் வெப்பச்சலனத்தைக் கட்டுப்டுத்துப் பகுதி செயலிழந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. அத்துடன் கேலாமஸ் என்று அழைக்கப்படும் இந்த மையப்பகுதி 105 டிகிரி செல்சியல் என்ற வெப்ப அளவைக்கடந்தவுடன் இங்குஇருக்கும் அல்புமின் என்ற ஒரு வகையான புரதசத்து உறைந்து, இரத்தஓட்டத்தை பாதித்துவிடுகிறது. இதனால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு சிலருக்கு இதன்போது அதிகளவிலான வியர்வை கூட வெளியேறாது. குமட்டலும் வாந்தியும் மட்டுமே ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு நா குழறும், வலிப்பு கூட தோன்றும். இதன் காரணமாக உடலுறுப்புகள் செயலற்ற நிலைக்கு சென்றுவிடக்கூடிய அபாயமும் உண்டு , இதயத்துடிப்பின் அளவு சீரற்றதாகிவிடும். சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். ஒரு சிலருக்கு தசைகள்கூட வலுவிழந்துப்போகக்கூடிய வாய்ப்புண்டு. ஒரு சில முதியவர்கள் இதன் காரணமாகவே இரத்த ஓட்டம் மரணத்தைச் சந்திக்கும் நிலை கூட ஏற்படும்.

இதற்கு சிகிச்சையை விட முன்னெச்சரிக்கையான தற்காப்பு நடவடிக்கைத்தான் சரியானது. அடிக்கடி குளிர்ந்த நீரிலோ அல்லது சாதாரணமான தண்ணீரிலோ குளிக்கவேண்டும். தேவையான அளவிற்கு அதாவது தாகம் எடுக்கும் போதெல்லாம் அதனை முழுமையாக தணிக்கும் அளவிற்கு காய்ச்சி வடிகட்டிய சுத்தமான குடிநீரை பருகவேண்டும். இனிப்பு மற்றும் சர்க்கரை அதிகமுள்ள குளிர்பானங்களையோ அல்லது குளிர்ந்த மதுவினையோ அருந்தக்கூடாது. வியர்வையை எளிதில் உறிஞ்சிக்கொள்ளும் பருத்தி ரக ஆடையையே அணியவேண்டும். பீ பிளாக்கர்ஸ் எனப்படும் இதய பாதிப்புள்ளவர்கள் கோடை வெயிலில் வெளியில் பயணிப்பதை தவிர்க்கவேண்டும்.

Dr. S. M. ராஜேந்திரன்

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04